பல்லி, கரப்பான் தொல்லையா? பத்து ரூபா செலவு செஞ்சா போதும் விரட்டி அடிக்கலாம்!!

First Published | Oct 19, 2024, 11:09 AM IST

Home Remedies For Lizards And Cockroaches : வீட்டிலிருந்து கரப்பான் பூச்சிகள் மற்றும் பல்லி தொல்லைகளை அடியோடு விரட்ட சில குறிப்புகள் இங்கே.

Home Remedies For Lizards And Cockroaches In Tamil

நாம் நம்முடைய வீட்டை எவ்வளவுதான் தூத்துப் பெரிக்கி சுத்தமாக வைத்தாலும் வீட்டில் கரப்பான் பூச்சிகள் மற்றும் பல்லி தொல்லைகள் அதிகமாகவே இருக்கும். அதுவும் குறிப்பாக மழைக்காலங்களில் இவற்றின் தொல்லை அதிகமாகவே இருக்கும் என்றே சொல்லலாம். 

மழைக்காலங்களில் வீட்டை சுற்றி ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் வீட்டில் கரப்பான் பூச்சிகள் வர ஆரம்பிக்கும். அதுவும் குறிப்பாக குளியலறை மற்றும் சமையலறை சிங் ஆகிய இடங்களில் கரப்பான் பூச்சிகளின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும். எவ்வளவுதான் அவற்றை வராதபடி பல முயற்சிகளை செய்தாலும் அவை வீட்டில் அங்கும் இங்குமாக சுற்றிக் கொண்டுதான் இருக்கும். இதனால் நம்முடைய சுகாதாரமும் பாதிக்கப்படும். 

Home Remedies For Lizards And Cockroaches In Tamil

இது கூடவே பல்லிகளின் தொல்லையும் அதிகமாகவே இருக்கும். சில சமயங்களில் பல்லிகள் சுவர்களில் மட்டுமின்றி தரையில் கூட ஊர்ந்து செல்கின்றன. இது போன்ற பிரச்சகளை நீங்களும் உங்களது வீட்டில் சந்திக்கிறீர்களா? கரப்பான் பூச்சிகள் மற்றும் பல்லிகளை வீட்டிலிருந்து பல முயற்சிகளை எடுத்தும் ஒன்றும் பிரயோஜனமில்லையா? எனவே இவற்றை வீட்டிலிருந்து நிரந்தரமாக விரட்டியடிக்க, அதுவும் எளிய முறையில் செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கானது தான். 

ஆம், உங்கள் வீட்டில் இருந்து பல்லி மற்றும் கரப்பான் பூச்சிகளை விரட்டி அடிக்க 6 பொருட்களை மட்டும் தண்ணீரில் கலந்து தரையை துடைத்தால் போதும். அவைகள் வீட்டை விட்டு ஓடிவிடும் இனி வரவே வராது. சரி, இப்போது அது என்ன என்று இங்கு பார்க்கலாம்.

Tap to resize

Home Remedies For Lizards And Cockroaches In Tamil

வீட்டிலிருந்து பல்லி மற்றும் கரப்பான் பூச்சிகளை விரட்டியடிக்க டிப்ஸ்:

உப்பு & எலுமிச்சை

நீங்கள் உங்கள் வீட்டின் தரையை துடைக்கும் முன் அந்த தண்ணீரில் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு கலந்து துடைக்கவும். இந்த நீரைக் கொண்டு தரை மட்டுமின்றி சுவர்கள், தாளபாடங்கள் ஆகியவற்றிலும் துடைக்கலாம். இவ்வாறு செய்தால் உங்கள் வீடு பளபளப்பாகவும், நறுமணமாகவும் இருக்கும். முக்கியமாக பல்லி மற்றும் கரப்பான் பூச்சிகள் தொல்லை இருக்காது.

கற்பூரம் & கிராம்பு

தரையை துடைக்கும் தண்ணீரில் கற்பூரத்தை பொடியாக்கி அதில் சேர்க்கவும். இதனுடன் கிராம்பு எண்ணெயும் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது இந்த தண்ணீரை கொண்டு வீட்டின் தரையை நன்கு துடைத்து எடுக்கவும். இவற்றிலிருந்து வரும் வலுவான வாசனையால் பல்லி மற்றும் கரப்பான் பூச்சிகள் வீட்டிலிருந்து ஓடிவிடும்.

இதையும் படிங்க: Kitchen Tips : கரப்பான் பூச்சிகளை அடியோடு அழிக்க 'இத' மட்டும் செய்யுங்க.. கொத்து கொத்தாக செத்து மடியும்!

Home Remedies For Lizards And Cockroaches In Tamil

வினிகர் & பேக்கிங் சோடா

உங்கள் வீட்டு தரையை துடைக்க பயன்படுத்தும் தண்ணீரில் ஒரு கப் வினிகர் மற்றும் 3 ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலக்கவும். இப்போது இந்த தண்ணீரைக் கொண்டு தரையை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். இப்படி செய்து வந்தால் மழைக்காலத்தில் வீட்டில் பூச்சிகள், பல்லி மற்றும் கரப்பான் பூச்சிகளின் தொல்லை இருக்கவே இருக்காது.

இதையும் படிங்க:  கரப்பான் பூச்சிகள் உங்க வீட்டிலிருந்து தலைத் தெறிக்க ஓட.. ஆரஞ்சு பழ தோலை இப்படி யூஸ் பண்ணுங்க!

Latest Videos

click me!