மாதவிடாய் நாட்களில் நடைபயிற்சி செய்யலாமா?:
மாதவிடாய் நாட்களில் நடைபயிற்சி செய்தால் மேம்பட்ட சுழற்சி, மனநிலை மேம்பாடு, மன அழுத்தத்தை குறைக்கும், எடை மேலாண்மை மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வு உள்ளிட்ட பல நன்மைகளை வாரி வழங்குவதாக கூறப்படுகிறது. ஆனாலும் உங்களது உடல் எப்படிப்பட்டது என்று உங்களுக்கு தான் தெரியும். எனவே நடை பயிற்சி செய்யும் போது கவனமாக இருப்பது மிகவும் அவசியம். அந்த வகையில் மகப்பேறு மருத்துவர்களின் ஆலோசனைப்படி, பெண்கள் மாதவிடாய் நாட்களில் நடைபயிற்சி தவிர சில உடற்பயிற்சி கூட செய்யலாம் என்று பரிந்துரைக்கின்றனர்.
மாதவிடாய் நாட்களில் நடைபயிற்சி செய்வதன் நன்மைகள்:
மேம்படுத்தப்பட்ட ரத்த ஓட்டம்..
மாதவிடாய் நாட்களில் நடைபயிற்சி செய்தால் உடலில் ஒட்டுமொத்த ரத்த ஓட்டத்தையும் மேம்படுத்தும். ரத்த ஓட்டம் மேம்படுவதன் மூலம் மாதவிடாய் பிடிப்பை கட்டுப்படுத்தப்படும். இதுதவிர, மாதவிடாய் நாட்களில் நடைபயிற்சி செய்தால் ரத்தப்போக்கை திறம்பட நீக்குகிறது மற்றும் உடலில் வலி மற்றுன் வீக்கம் ஏற்படுவதை தடுக்கிறது.