சரிவிகித உணவு..
முகத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்க சரிவிகித உணவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே உங்கள் அன்றாட உணவில் பழங்கள், காய்கறிகள், தானியங்கள், மெலிந்த புரதங்கள் நிறைந்த உணவுகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த உணவுகள் அதிக கலோரிகளை உட்கொள்ளாமல் உங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன.
பழங்கள், காய்கறிகளில் நார்ச்சத்து, கலோரிகள் அதிகம் உள்ளன. இவை உங்கள் பசியை ஓரளவுக்குக் குறைக்கும். அதேபோல் நீங்கள் எடுத்துக் கொள்ளும் கலோரிகளின் அளவையும் ஓரளவுக்குக் குறைக்க உதவும்.
சிக்கன், மீன், டோஃபு, பருப்பு வகைகள் போன்ற மெலிந்த புரதங்களும் உங்களுக்கு உதவும். இவை தசைகளை உருவாக்கவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவுகின்றன.
அதேபோல் பிரவுன் ரைஸ், கினோவா, ஓட்ஸ் போன்ற தானியங்களையும் சாப்பிடுங்கள். ஏனெனில் இவை உங்கள் உடலுக்குத் தேவையான நிலையான சக்தியை வழங்குகின்றன. அதேபோல் நீங்கள் அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்கும். இவை உங்கள் எடையைக் குறைக்கும்.