Parenting Tips : குழந்தைகள் சொல் பேச்சு கேட்பதில்லையா? இந்த வழிகளில் முயற்சி செய்து பாருங்கள்

Published : Jul 14, 2025, 05:03 PM IST

தற்போதைய காலத்தில் குழந்தை வளர்ப்பு என்பது பலருக்கும் சவாலானதாக மாறிவிட்டது. குழந்தைகள் தங்கள் பேச்சை கேட்பதில்லை என பெற்றோர்கள் பலரும் வருத்தம் கொள்கின்றனர். அவர்கள் இந்த பதிவில் கூறப்பட்டுள்ள சில வழிமுறைகளை முயற்சி செய்து பார்க்கலாம்.

PREV
15
குழந்தைகளுக்கு முன்னுரிமை கொடுங்கள்

குழந்தைகள் பேசத் தொடங்குவதற்கு முன்னர் அவர்களின் முழு கவனமும் உங்களிடம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிற வேலைகளை செய்து கொண்டோ அல்லது அலட்சியம் காட்டினாலோ குழந்தைகளால் சொல்ல வரும் கருத்தை சொல்ல முடியாமலேயே போய்விடும். எவ்வளவு வேலை இருந்தாலும் குழந்தைகளுக்கு முன்னுரிமை கொடுங்கள். அவர்கள் ஏதேனும் உங்களிடம் பேச நினைத்தால் அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுங்கள். உங்கள் சொல் பேச்சை குழந்தைகள் கேட்பதற்கு இதுவே முதல் படியாகும்.

25
குழந்தைகளுக்கு மரியாதை கொடுங்கள்

குழந்தைகள் பேசும்போது, அவர்களின் கண்களைப் பார்த்து, அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை கவனமாகக் கேளுங்கள். குழந்தைகள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த நேரம் எடுக்கலாம். பொறுமையாக இருங்கள் மற்றும் அவர்களை இடைமறிக்காதீர்கள். குழந்தைகள் சொல்வதை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை சரியாக புரிந்து கொண்டீர்களா என்று கேளுங்கள். குழந்தைகளிடம் மரியாதையுடன் பேசுங்கள். அவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளியுங்கள்.

35
நீண்ட அறிவுரைகள் வழங்காதீர்கள்

குழந்தைகளிடம் நேர்மறையாக பேசுங்கள். அவர்களின் தவறுகளை மட்டுமே சுட்டிக்காட்டாதீர்கள். இது தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கலாம். பிறருடன் ஒப்பிட்டு பேசுவதை முதலில் நிறுத்துங்கள். நீண்ட அறிவுரைகள், விளக்கங்களை தவிர்த்து விடுங்கள். நீங்கள் எப்படி பேசுகிறீர்கள் என்பதை குழந்தைகள் கவனிக்கிறார்கள். எனவே, நீங்கள் எப்போதும் நல்ல முறையில் பேச வேண்டும். குழந்தைகள் தவறாக பேசினால், அவர்களை மென்மையாக திருத்துங்கள். திருத்திக் கொள்வதற்கு வாய்ப்பு கொடுங்கள்.

45
உடன்பாடு இல்லை என்றால் பொறுமையாக கூறுங்கள்

குழந்தைகளுக்கு அன்பு காட்டுங்கள். அவர்கள் அன்பாக உணரும்போது, உங்கள் பேச்சைக் கேட்க வாய்ப்புள்ளது. குழந்தைகள் ஏதாவது புதிய விஷயங்களை சொல்ல வருகிறார்கள் என்றால் அவர்களை ஊக்குவியுங்கள். கருத்தில் உடன்பாடு இல்லை என்றால் மென்மையாக கூறுங்கள். குழந்தைகள் உங்கள் பேச்சைக் கேட்க வேண்டும் என்று நினைப்பது போல், அவர்களுக்கும் நீங்கள் செவி சாய்க்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த வழிகளைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் குழந்தைகள் உங்கள் சொல் பேச்சை கேட்கலாம்.

55
மருத்துவ ஆலோசனை தேவை

ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானவர்கள். அவர்களுக்கென்று தனித்திறமைகளும், தனியான குணங்களும் இருக்கும். குழந்தைகள் உங்கள் சொல்பேச்சை கேட்கவில்லை என்பதற்காக அவர்களை முழுவதும் புறக்கணிக்க கூடாது. அவர்களுக்கு சொல்லி புரியவைக்க வேண்டும். குழந்தைகள் எதற்கெடுத்தாலும் அடம் பிடிக்கிறார்கள் அல்லது உங்கள் சொல்பேச்சு கேட்க வில்லை என்றால் மருத்துவரை அணுகி ஆலோசனைப் பெறலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories