வளரும் குழந்தைகள் தவறு செய்வது இயல்பானதுதான். தவறுகளில் இருந்து தான் குழந்தைகள் கற்றுக் கொள்வார்கள். குழந்தைகளின் தவறுகளுக்கு பெரியோர் எந்த மாதிரி எதிர்வினை செய்கிறார்கள் என்பதுதான் குழந்தைகளுடைய தன்னம்பிக்கை, ஆளுமையில் தாக்கத்தை ஏற்படுத்தும். குழந்தைகள் தவறு செய்யும் போது பெற்றோர் செய்ய வேண்டிய ஆறு விஷயங்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
26
அவமானம்
குழந்தைகள் ஏதேனும் விஷயத்தை தவறாக செய்யும் போது வருத்தப்படுகிறார்கள். அவமானமாக உணர்வார்கள். அந்த சமயத்தில் பெற்றோர் குழந்தைகளிடம் தவறுகள் வாழ்க்கையின் ஒரு பகுதி என்பதை எடுத்து சொல்ல வேண்டும். இதனால் குழந்தைகளின் பயம் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்புவார்கள். அவமான உணர்வில் இருந்து மீண்டு வருவார்கள். தவறுகள் கற்றலில் ஒரு பகுதிதான் என்பதை குழந்தைகள் உணர்வதால், தோல்வியில் கவனம் செலுத்தாமல் பிரச்சனைகளை சரி செய்வதில் கவனம் செலுத்துவார்கள்.
36
குற்றஞ்சாட்டாதீர்கள்
குழந்தைகள் தவறு செய்யும் போது அவர்களை திட்டி தீர்க்காமல் புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். ஏன் குழந்தை அவ்வாறு செய்தது என்பதை குறித்து கேட்டு தெரிந்து கொள்வதே பெற்றோரின் முதலாவது கடமையாகும். இதை செய்யும் போது குழந்தைகள் பெற்றோரிடம் பாதுகாப்பாக உணர்வார்கள். மனம் திறந்து உரையாடுவார்கள்.
குழந்தைகள் வெற்றி பெறுவதை விட அவர்கள் பங்கு கொள்வது முக்கியமான விஷயம் என்பதை சொல்லிக் கொடுக்க வேண்டும். ஒரு போட்டியில் குழந்தைகள் தோல்வியை கண்டாலும், அதில் கலந்துகொண்டு அவர்கள் முயற்சி செய்தது பெரிய விஷயம் என்பதை புரிய வைக்க வேண்டும். பெரிய சாதனைகளை விட அதை அடைய செய்த முயற்சி பாராட்டக் கூடிய விஷயம் என்பதை பெற்றோர் உணர வேண்டும். குழந்தைகளின் முயற்சியை பாராட்டும்போது குழந்தைகள் விடாமுயற்சியுடன் வெற்றி நோக்கி பயணிக்க ஆரம்பிப்பார்கள்.
56
தவறுகள்
தவறுகள் தான் வெற்றியின் படிக்கட்டுகள்; முயற்சிதான் வெற்றியை பெற்றுத் தரும் என்பதை குழந்தைகளுக்கு புரிய வைப்பது பெற்றோரின் கடமையாகும். தோல்விகள் அவர்களுடைய வெற்றியின் படிக்கட்டுகளாக மாறும் என்பதை உணர்த்த வேண்டும். தோல்வியை அடுத்த வெற்றிக்கான வாய்ப்பாக பார்க்க கற்றுக் கொடுக்க வேண்டும். தோல்வியை வளரும் குழந்தைகள் விடாமுயற்சியுடன் மீண்டும் முயற்சி செய்யும் மனநிலையுடன் இருப்பார்கள் இயல்பிலேயே தன்னம்பிக்கை அவர்களுக்கு அதிகமாக இருக்கும்.
66
பிழைகள்
மனிதர்கள் ஒன்றும் புனிதர்கள் கிடையாது. அவர்கள் தவறு செய்யக் கூடியவர்கள். தெரியாமல் சில தவறுகளை செய்யும்போது அதை மன்னிக்கும் பக்குவத்தையும், வழக்கத்தையும் குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும். இதற்கு பெற்றோர் குழந்தைகள் செய்யும் சிறு தவறுகளை மன்னிக்கும் வழக்கத்தை கொண்டிருக்க வேண்டும். இதைப் பெற்றோர் குழந்தைகளுக்கு சரியாக செய்யும் போது பயம், கவலை, மன அழுத்தம், குற்ற உணர்ச்சி போன்ற பல்வேறு உணர்வுகளிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க முடியும். இது அவர்களுடைய ஆளுமையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.