
உணவு சாப்பிட்ட பிறகு ஏப்பம் வருவது மிகவும் பொதுவானது. ஆனால் சில சமயங்களில் இந்த ஏப்பம் அழுகிய முட்டை போன்ற துர்நாற்றம் வீசு அளவுக்கு இருந்தால், அது சங்கடத்தை ஏற்படுத்தும். இது புளித்த ஏப்பம் என்று அழைக்கப்படுகிறது. சில சமயங்களில் இதனால் மார்பு மற்றும் தொண்டையில் எரியும் உணர்வை ஏற்படும். புளித்த ஏப்பம் துர்நாற்றமாக வருவதற்கு முக்கிய காரணம் ஆக்சிஜன் மற்றும் கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்றுகிறது. மேலும் இவை இரண்டும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பால் பொருட்களுடன் வினைபுரிந்து துர்நாற்றமாக ஏப்பத்தை வெளியேற்றுகிறது. இதை தவிர பிற காரணங்களும் உள்ளன.
புளித்த ஏப்பம் வருவதற்கு காரணங்கள்:
- இரவு தாமதமாக சாப்பிடுவது, அதிகமான உணவை சாப்பிடுவது, விரைவாக சாப்பிடுவது, உடல் பருமனாக இருப்பது, முக்கியமாக சாப்பிட்ட உடனே படுத்துக் கொள்வது.
- வெங்காயம், பூண்டு, தக்காளி, புதினா, சாக்லேட், காரமான மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால்.
- காபி, டீ அல்லது கார்பனேற்றப்பட்ட பானங்களை குடிப்பதால்.
- சிகரெட் மற்றும் ஆல்கஹால்
- அதிகப்படியான எண்ணெய் உணவுகளை சாப்பிடுவது
இதையும் படிங்க: மவுத்வாஷ் யூஸ் பண்றீங்ளா? இந்த விஷயம் தெரிஞ்சா இனி பயன்படுத்த மாட்டீங்க!!
புளித்த ஏப்பத்திற்கான அறிகுறிகள்:
- அடிவயிற்றில் ஏற்படும் எரிச்சலானது உணவுக்குழாய், கழுத்து மற்றும் நெஞ்சுப்பகுதி வரை பரவி வலியை ஏற்படுத்தும்.
- அதன் பிறகு வாயில் கசப்பான அல்லது புளிப்பான சுவையை ஏற்படுத்தும்.
- சாப்பிட்ட உணவு அல்லது குடித்த திரவங்கள் மீண்டும் வயிற்றிலிருந்து வாய்க்கு வரும்.
- பல நாள் இருக்கும் இருமல்
- வாந்தி அல்லது குமட்டல் ஏற்படும்.
இதையும் படிங்க: வாயில் உள்ள கெட்ட நாற்றத்தை போக்க காலையில் செய்ய வேண்டிய 5 படிநிலைகள்.. நிபுணர்களே சொன்னது!
புளித்த ஏப்பத்தை சரி செய்வதற்கான வீட்டு வைத்தியங்கள்:
1. உணவு சாப்பிட்ட பிறகு ஒரு ஸ்பூன் பெருஞ்சீரகத்தை நன்றாக மென்று சாப்பிடுங்கள் இதனால் செரிமானம் தூண்டப்பட்டு எந்தவித பிரச்சனைகளையும் ஏற்படுத்தாது.
2. ஒரு ஸ்பூன் ஓமத்தை ஒரு கிளாஸ் தண்ணீரில் நன்றாக கொதிக்க வைத்து பிறகு வடிகட்டி குடித்தால் நெஞ்செரிச்சல் ஏற்படாது.
3. ஒரு சிட்டிகை பெருங்காயத்தை சூடான நீரில் கலந்து குடித்தால் அசிடிட்டி பிரச்சனை வராது.
4. சாப்பிட்ட பிறகு புளித்த ஏப்பம் வாயு பிரச்சனை இருந்தால் புதினா டீ குடியுங்கள் இது நெஞ்செரிச்சல் மற்றும் அமிலத்தன்மையை குறைக்கும். மேலும் குளித்து ஏப்பம் மற்றும் வாயிலிருந்து நிவாரணம் அளிக்கும்.
5. சாப்பிட்ட உடனே புளித்த ஏப்பம் வந்தால் சீரக தண்ணீர் குடியுங்கள்.
சீரகம் செரிமானத்திற்கு ரொம்பவே நல்லது என்பதால் ஒரு ஸ்பூன் சீரகத்தை 1 கிளாஸ் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடியுங்கள். இதனால் செரிமான அமைப்பை மேம்படுத்துவது மட்டுமின்றி வாயு அமலத்தன்மை மற்றும் புளித்த இயக்கத்திலிருந்து உங்களுக்கு நிவாரணம் கொடுக்கும்.
6. இஞ்சி வயிற்றுக்கு ரொம்பவே நல்லது. புளித்து ஏற்ற பிரச்சனை இருந்தால் இஞ்சியை நன்றாக மென்று சாப்பிடுங்கள். இஞ்சியில் இருக்கும் ஆன்டி-ஆக்சிடன்ட், அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்க உதவும். இஞ்சி சாறு குடித்தால் அமிலத்தன்மை, வாயு, புளிப்பு ஏப்பம் போன்ற பிரச்சனைகள் நீங்கும்.