வேக வைத்த முட்டையின் பயன்கள்:
வேக வைத்த முட்டையில் சிறந்த புரதச்சத்து சுமார் ஆறு கிராம் உள்ளது. முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் டி உள்ளது. ஓமேகா 3 முட்டையில் அதிகம் இருப்பதால் இதய பிரச்சனைகள் வராமல் காக்கிறது. எலும்புகளுக்கு முட்டை வலிமையை தரும். அதேபோன்று, சுகர், ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க முட்டை மிக சிறந்த ஒரு உணவுப்பொருள் ஆகும். இதில் ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகள் நிறைந்துள்ளது. மேலும், முட்டை கண் பார்வைக்கு மிகவும் உகந்த ஒன்றாக இருக்கிறது.