Fruit-peels: இந்த பழங்களின் தோலை உறிக்க வேண்டாம்..அப்படியே சாப்பிடலாம்...! எவ்வளவு நன்மைகள் தெரியுமா ..?

Published : Sep 18, 2022, 07:03 AM IST

Fruit-peels: பழங்களை எப்போதும் நாம் தோல் நீங்கி சாப்பிடுவது வழக்கம். ஆனால், உண்பதற்கு முன்பு தோல் நீக்கவே கூடாத பழங்கள் சிலவற்றை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். 

PREV
16
Fruit-peels: இந்த பழங்களின் தோலை உறிக்க வேண்டாம்..அப்படியே சாப்பிடலாம்...! எவ்வளவு நன்மைகள் தெரியுமா ..?


பொதுவாகவே, பழங்களை தோல் நீங்கி சாப்பிடுவது, உகந்தது அல்ல. உண்பதற்கு முன்பு தோல் நீக்கவே கூடாத பழங்கள் சிலவற்றை பார்ப்போம். வைட்டமின் A நிரம்பியுள்ள பிளம்ஸ், இதயத்திற்கு நலம் பயக்கும் துவர்ப்பு சுவை நிரம்பியுள்ள பேரிக்காய், வைட்டமின் ஈ உள்ள கிவி, ஆன்டிஆக்சிடன்ட்ஸ் நிரம்பிய ஆப்பிள், வைட்டமின் சி அடங்கிய சப்போட்ட, பல்வேறு சத்துக்கள் கொண்ட மாம்பழம் ஆகிய பழங்களை தோல் நீக்காமல் அப்படியே சாப்பிடுவது நல்லது. இதில் உள்ள சத்துக்கள் என்ன என்பதை பார்ப்போம்.

26

பிளம்ஸ் தோல்:

பிளம்ஸ் தோல் நீக்காமல் சாப்பிடும் போது, பல்வேறு உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இது இரத்தத்தை சுத்தம் செய்து, இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கும் தன்மை கொண்டது. மேலும், இரத்தத்தில் கலந்துள்ள கொழுப்புப் பொருட்களை கரைக்கும் குணமுடையது. இந்த பிளம்ஸ் பழங்களை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு செரிமான உறுப்புகள் அனைத்தும் சீராகி, மலச்சிக்கல் போன்றவை ஏற்படாமல் தடுப்பதிலும் சிறந்த  பங்காற்றும்.

மேலும் படிக்க...Eating Broccoli: உடலில் பல நோய்களை விரட்டி அடிக்கும் ப்ரோக்கோலி..அவற்றின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரியுமா..?

36

 பேரிக்காய் தோல்:

பேரிக்காய் சாப்பிடுவதால் எலும்புகள், பற்கள் பலப்படும். இதயம் சீராக வலுவாகும். இரைப்பை, குடல், பிற ஜீரண உறுப்புகளை பலமாக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. மேலும், சிறுநீரை வெளியேற்றவும், பலவீனமான சிறுநீரகச் செயல்பாட்டைச் சரி செய்யவும், உடலின் அதிகப்படியான நீரை வெளியேற்றி சுத்தப்படுத்தவும் உதவுகிறது. 

46

 

கிவி தோல்:

வைட்டமின்கள், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்து போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை ஆரோக்கியமாகவும், உடல் அழகை மேம்படுத்த உதவுகிறது. கிவி பழம், பார்ப்பதற்கு பச்சையாக சிறிய கருப்பு விதைகள் கொண்டு இருக்கும். இதன் சுவை, ஸ்ட்ராபெர்ரிகள், முலாம்பழம் மற்றும் வாழைப்பழங்களின் கலவையான கலவையாகும்.  கிவியில் 

56

 

ஆப்பிள்  தோல்:

ஆப்பிளில் ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பொருட்கள் உள்ளன. இவை உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும், உடலில் புதிய செல்கள் உருவாவதைத் தூண்டும் சில பொருட்கள் இதில் உள்ளன. ஆப்பிளில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமானம் சீராக நடைபெற உதவுகிறது. மலச்சிக்கல், வாயு பிரச்சனையால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆப்பிள் வரப்பிரசாதம்.

மேலும் படிக்க...Eating Broccoli: உடலில் பல நோய்களை விரட்டி அடிக்கும் ப்ரோக்கோலி..அவற்றின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரியுமா..?

66

 மாம்பழம்:

மாம்பழத்தில் உள்ள நார்ச்சத்துக்கள் அதிகப்படியான உடல் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. மாம்பழத்தை சாப்பிட்ட பிறகு, அதிகமாக பசி எடுப்பதில்லை.இதில்,  உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் பெருங்குடல் புற்றுநோய், லுகேமியா மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய்களைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. .

மேலும் படிக்க...Eating Broccoli: உடலில் பல நோய்களை விரட்டி அடிக்கும் ப்ரோக்கோலி..அவற்றின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரியுமா..?

Read more Photos on
click me!

Recommended Stories