மெக்மாஸ்டர் பல்கலைக்கழகம் கனடா மற்றும் சர்வதேச நெட்வொர்க்குடன் இணைந்து கால்வே பல்கலைக்கழகத்தின் புதிய கண்டுபிடிப்புகளின்படி, சர்க்கரை-இனிப்பு மற்றும் செயற்கையாக இனிப்பு சேர்க்கப்பட்ட குளிர்பானங்கள் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பை 22 சதவீதம் அதிகரிக்கிறது என்பது தெரியவந்துள்ளது.
மேலும், ஒரு நாளைக்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முறை இந்த பானங்கள் குடிப்பது மூலம் ஆபத்து கடுமையாக அதிகரிப்பதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு/மத்திய ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய நாடுகளில் ஃபிஸி பானங்கள் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு அதிகமாக இருந்தது என்றும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.