Copper water: காப்பர் தண்ணீரில் இவ்வளவு மருத்துவ நன்மைகளா..? ஆயுர்வேதம் சொல்லும் 5 சிறந்த பயன்கள்..

Published : Jul 30, 2022, 01:49 PM IST

Copper water: காப்பர் பாத்திரங்களில் நீரை சேமித்து பருகினால் எவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா..? அவற்றை பற்றி இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.

PREV
16
Copper water: காப்பர் தண்ணீரில் இவ்வளவு மருத்துவ நன்மைகளா..? ஆயுர்வேதம் சொல்லும் 5 சிறந்த பயன்கள்..
Copper water:


இன்றைய நவீன காலகட்டத்தில், நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்திய செம்பு பாத்திரங்கள், மண் பானை போன்ற பொருட்கள் எல்லாம் மலையேறிவிட்டது. நம்மிள் பெரும்பாலானோரும் தண்ணீர் குடிக்க பிளாஸ்டிக் பாட்டில்களையே பயன்படுத்தி வருகிறோம். ஆனால், காப்பர் (Copper) பாத்திரங்களில் நீரையோ அல்லது உணவையோ சேமித்து சாப்பிடுவதால் ஏற்படும் முழு நன்மைகளைப் பற்றி, ஆயுர்வேத நிபுணர்களின் தகவல்களை நீங்கள் இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

26
Copper mug

காப்பர் பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பது மற்றும் உணவு அருந்தும் போது, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. செரிமானமானத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் புற்றுநோயின் ஆபத்தை குறைத்து ஆரோக்கியமான வாழ்வை நமக்கு கொடுக்கிறது. 

மேலும் படிக்க..Sevvai Peyarchi: ரிஷப ராசியில் செவ்வாய் பெயர்ச்சி...இந்த ராசிகளுக்கு ஆகஸ்ட் 10 முதல் தலைவிதி தலைகீழாய் மாறும்

36
Copper water:

இரத்தசோகை பிரச்சனை

காப்பர் நீர், பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதிக்கும் இரத்தசோகை பிரச்சனையை கட்டுப்படுத்தும். குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் காப்பர் நீர் குடிப்பதால், தாய்க்கும், பிறக்கப்போகும் குழந்தைக்கும் உடல் ஆரோக்கியம், உடல் வலிமை கிடைக்கும். இதனால், வளரும் பருவத்திலேயே குழந்தைக்கு ஆரோக்கியம் உண்டாகும்.

46
Copper water:

செரிமானத்திற்கு உதவுகிறது

காப்பர் கொண்டு பரிமாறும் உணவு, உடலின் நோய்த்தொற்றுகளை தடுக்கிறது, பாக்டீரியாவை கொன்று நமக்கு நன்மைகளை அளிக்கிறது.செரிமான பிரச்சனையை சரி செய்கிறது. மேலும் வயிற்று எரிச்சலைக் குறைப்பதுடன், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.

மேலும் படிக்க....Cholesterol: கொலஸ்ட்ராலை டக்குனு கரைக்க சூப்பர் வீட்டு வைத்தியம்...மிஸ் பண்ணீடாதீங்க...

 

56
Copper water:

தைராய்டு சுரப்பி:

காப்பர் நீர் தைராய்டு சுரப்பியின் செயல்திறனை சமன் செய்கிறது. தைராய்டு சுரப்பிகளின் செயலிழப்பு மற்றும் தைராய்டு பிரச்சினைகளுக்கு சிறந்த ஒன்றாக இருக்கிறது. 

66
Copper water:

இதய ஆரோக்கியம்:

இதயத்திற்கான இரத்த ஓட்டத்தை மேம்படுத்த காப்பர் நீர் உதவுகிறது, இதனால் இரத்த நாளங்களை விரிவடைய அனுமதிப்பதன் மூலமும் காப்பர் நீர் உடலுக்கு நன்மை செய்கிறது. மேலும், காப்பர் நீர் அமிலத்தன்மை, இதய எரிச்சல், இருமல், சளி போன்றவற்றை சரி செய்து இதய  ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. 

மேலும் படிக்க..Sevvai Peyarchi: ரிஷப ராசியில் செவ்வாய் பெயர்ச்சி...இந்த ராசிகளுக்கு ஆகஸ்ட் 10 முதல் தலைவிதி தலைகீழாய் மாறும்

Read more Photos on
click me!

Recommended Stories