Green juice: வெறும் வயிற்றில் இந்த கிரீன் ஜூஸ் குடித்தால் போதும்..எவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கு தெரியுமா?

First Published | Oct 7, 2022, 1:04 PM IST

Green juice benefits: ஆப்பிள், பீட்ரூட் மற்றும் கேரட்ஜூஸ் போன்று, இந்த கிரீன் ஜூஸ் காலையில் குடித்தால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் வந்து சேரும். அவை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

Green juice:

இன்றைய நவீன காலத்தில் நம்முடைய வாழ்கை முறையும், சாப்பிடும் பழக்கமும் மாறியுள்ளது. அந்தவகையில் இன்று பழங்களை நேரடியாக சாப்பிடுவதற்குப் பதிலாக பெரும்பாலானோர் ஜூஸைத் தான் விரும்புகிறார்கள். ஒவ்வொரு கால 
 கட்டத்திற்கும் ஒவ்வொரு ஜூஸ் ட்ரெண்டாகும்.

green juice

அந்த வகையில் ஆப்பிள், பீட்ரூட் மற்றும் கேரட் ஜூஸ் போன்று, தற்போது க்ரீன் ஜூஸ் ட்ரெண்டாகி வருகிறது. இயற்கையான பச்சைக் காய்கறிகள், கொத்தமல்லி, புதினா போன்ற உணவுப் பொருள்களைக் கொண்டு இந்த ஜூஸ் தயாரிக்கப்படுகிறது.

மேலும் படிக்க...Weight loss: உடல் எடையை குறைத்து ஒல்லியாக வேண்டுமா..? இந்த டீடாக்ஸ் பானங்களை முயற்சி செய்து பாருங்கள்..

Tap to resize

green juice


இதன் நன்மைகள் என்ன..?

 பல காய்கறிகள், பழங்கள் இதில் இருப்பதால் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து இதில் கிடைக்கிறது.  

உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள் மற்றும் அனைத்து வகையான நீரிழிவு நோய் அபாயத்தையும் குறைக்கிறது. மேலும், இந்த கிரீன் ஜூஸ், நீரிழிவு நோயை கட்டுப்டுத்துகிறது 

இதில் இருக்கும் வைட்டமின் உடலில் நச்சுக்களை வெளியேற்றி நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது.

green juice

உடலில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகரிக்கும். அனைத்து உடல் உறுப்புகளின் செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது.

ஆனால், அதே நேரத்தில் அதன் சுவை சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். சிலருக்கு அழற்சி கூட ஏற்படலாம். அவ்வாறு இருந்தால் தவிர்த்துவிடலாம்.  தேவைப்பட்டால் உங்களுக்குப் பிடித்த காய்கறிகள், பழங்களை கொண்டு தனித்தனியாகவோ ஜூஸ் செய்து சாப்பிடலாம். 

மேலும் படிக்க...Weight loss: உடல் எடையை குறைத்து ஒல்லியாக வேண்டுமா..? இந்த டீடாக்ஸ் பானங்களை முயற்சி செய்து பாருங்கள்..

Latest Videos

click me!