Published : Oct 07, 2022, 02:13 PM ISTUpdated : Oct 07, 2022, 04:13 PM IST
Tips for Managing Stomach Bloating at time of menstruation: மாதவிடாயின் போது, வயிற்று வீக்கம் ஏற்பட புரோஜெஸ்ட்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் போன்ற ஹார்மோன் அளவுகள் நிலையான அளவில் இல்லாமல் இருப்பதே காரணமாகும்.
ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சி இருத்தல் அவசியம். ஆனால், இன்றைய பெரும்பாலான இளைய தலைமுறையிடம், ஒழுங்கற்ற மாதவிடாய், வயிற்று வலி, மனநிலை மாற்றங்கள், கருவுறாமை மற்றும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு போன்றவை இயல்பாகி உள்ளது.
29
மாதவிடாய் உடலை மட்டுமல்லாமல், மன நிலையிலும் பாதிப்பை ஏற்படுத்தும். மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு படபடப்பு, கோபமான மனநிலை, எரிச்சல், பதட்டம் ஆகியவை ஏற்படும். இந்த நேரத்தில் சில சில உணவுகள் வலி மற்றும் அசௌகரியத்தை குறைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் சில வகையான உணவுகள் வலியை அதிகரிக்கலாம். எனவே, பெண்கள் சரியான உணவு திட்டத்தை பின்பற்றுவது பயனுள்ளதாக இருக்கும்.
மாதவிடாய் காலத்தில், பொரித்த உணவுகள் மற்றும் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகள், ஹோட்டல் உணவுகள், ஜங்க உணவுகள், ரசாயனம் அல்லது சுவையூட்டி சேர்க்கப்பட்ட பாக்கெட் உணவுகள், காஃபி, மது உள்ளிட்ட உணவுகளை தவிர்த்தல் அவசியம்.
49
periods pain
வயிற்று வீக்கம், உப்புசம் போன்ற பிரச்சனைகள் மாதவிடாய் வரும் நாட்களுக்கு முன்னரும், பின்னரும் ஏற்படுகிறது. பொதுவாக வயிற்றுப் பகுதியில் திரவம் அல்லது வாயு அதிகப்படியாக தங்குவதால் வீக்கம் ஏற்படும். ஆனால் மாதவிடாய் காலத்திற்கு முன்னும், பின்னும் வயிற்று வீக்கம் ஏற்பட புரோஜெஸ்ட்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் போன்ற ஹார்மோன் அளவுகள் நிலையான அளவில் இல்லாமல் இருப்பதே காரணமாகும்.
59
இஞ்சி:
மாதவிடாய் வயிற்று உப்புசத்திற்கு இஞ்சி சரியான தீர்வை அளிப்பதாக உள்ளது. இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, இது வலி மற்றும் தசை பிடிப்பில் இருந்து ஆறுதல் அளிக்க உதவுகிறது. இஞ்சி சாறு அல்லது இஞ்சி தேநீர் தயாரித்து பருகுவது மாதவிடாய் காலத்தில் நல்ல பலனைக் கொடுக்கும்.
69
பெருஞ்சீரகம்:
சோம்பு எனப்படும் பெருஞ்சீரகம் உடலுக்கு வழங்கப்படுகிறது. பெருஞ்சீரகம், இரைப்பையில் உள்ள நச்சுக்களை அகற்ற உதவுகிறது. வாயு மற்றும் வயிற்று வீக்கத்தில் இருந்தும் ஆறுதல் தருகிறது. மாதவிடாய் காலத்தில் பெருஞ்சீரகத்தை உட்கொள்வது ரத்தப்போக்கை கட்டுப்படுத்தவும், ஹார்மோன் பிரச்சனைகளை சரி செய்யவும் உதவும்.
79
banana
வாழைப்பழம்:
வாழைப்பழத்தில் பி6 மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. வாழைப்பழத்தை உட்கொள்ளும் போது, அதிலுள்ள பொட்டாசியம் சிறுநீரகங்களில் உள்ள சோடியத்தை வெளியேற்ற உதவுகிறது, மேலும் இது இரத்த அழுத்தத்தை குறைக்கவும், வயிற்று வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
வயிறு சம்பந்தமான பல்வேறு பிரச்சனைகளுக்கு ஓமம் சிறந்த நிவாரணியாக இருந்து வருகிறது. சிறிதளவு ஓமத்தை எடுத்து வாயில் போட்டு வெந்நீர் குடிந்தால், வாயுத்தொல்லை போன்ற பிரச்சனைகள் நீங்கும். குறிப்பாக, இரைப்பை சாறு சுரக்கவும் மற்றும் வாயு, வீக்கம் மற்றும் தசை பிடிப்புகளை போக்கவும் உதவுகிறது.
99
வெல்லம்:
வெல்லத்தில் அதிக பொட்டாசியம் மற்றும் குறைந்த சோடியம் இருப்பதால் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இது உடல் செல்களில் அமில சமநிலையை பராமரிப்பதன் மூலமாக வீக்கத்திலிருந்து நிவாரணம் அளிக்கிறது.