Weight Loss Tips: உடல் எடையை டக்குனு குறைக்க...இந்த ஒரு பானம் மட்டும் ட்ரை பண்ணி பாருங்க பாஸ்..

Published : Sep 05, 2022, 11:18 AM IST

Weight Loss Tips: உடல் எடையை  பல வழி முறைகளை பின்பற்றியும், குறைக்க முடியாதவர்களுக்கு இந்த ஒரு பானம் மட்டும், பயன்படுத்தி பாருங்கள் பெஸ்ட் ரிசல்ட் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.

PREV
15
Weight Loss Tips: உடல் எடையை டக்குனு குறைக்க...இந்த ஒரு பானம் மட்டும் ட்ரை பண்ணி பாருங்க பாஸ்..
Weight Loss Tips:

இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் உடல் எடையை அதிகரிப்பு என்பது நம்மில் பெரும்பாலானோர், எதிர்கொண்டு வரும் மிக பெரிய பிரச்சனையாக உள்ளது. இதற்கு முக்கிய காரணமாக மேற்கத்திய உணவு பழக்கவழக்கம், உடல் உழைப்பில்லாமை, மன அழுத்தம் போன்றவை அமைத்துள்ளது.

 மேலும் படிக்க...Sani Peyarchi: சனி பகவான் ராசி மாற்றம்..இன்னும் 110 நாட்களில் இந்த ராசிகளுக்கு சனியின் நேரடி அருள் கிடைக்கும்

 

25
Weight Loss Tips:

இந்த பிரச்சனையை சமாளிக்க, மக்கள் யோகா பயிற்சி மற்றும் ஜிம்மில் சேருதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். எங்கே திரும்பி பார்த்தாலும், உடற்பயிற்சி கூடங்கள் அதிகரித்து காணப்படுகிறது. இப்படி எந்த சிரமமும் இல்லாமல், நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் மூலமே எளிதாக எடையை குறைக்க முடியும். அப்படியாக, எந்த பக்க விளைவுகள் இல்லாமல், உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இந்த பானம் ஒரு அற்புதமான வீட்டு வைத்திய குறிப்பு ஆகும்..

35
Weight Loss Tips:

தயாரிப்பு முறை:

இந்த தேநீர் தயாரிக்க சுத்தமான துளசி இலைகள் இருந்தால் போதும். எந்த ஒரு விசேஷ பொருளும் தேவையில்லை. தேநீர் செய்யும் போதெல்லாம், 2 துளசி இலைகளை நன்றாக சுத்தம் செய்து அதில் போடவும். சர்க்கரை மற்றும் பால் குறைவாக சேர்க்கவும். தினமும் காலையிலும் மாலையிலும் இந்த டீயை குடிப்பதால், படிப்படியாக தேவையற்ற உடல் எடை குறையத் தொடங்கி, கொலஸ்ட்ரால் அளவினை குறைத்து உடல் எடையை  கட்டுக்குள் வைக்கும் என்பது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

 மேலும் படிக்க...Sani Peyarchi: சனி பகவான் ராசி மாற்றம்..இன்னும் 110 நாட்களில் இந்த ராசிகளுக்கு சனியின் நேரடி அருள் கிடைக்கும்

45
Weight Loss Tips:

பயன்கள்:

மனச்சோர்வு நீங்கும்

துளசி தேநீர் அதிக உடல் எடையை குறைப்பதில் மட்டுமல்ல, மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்தை நீக்குவதற்கும் பெரிதும் உதவுகிறது. மன அழுத்தம் காரணமாக, பலருக்கு தூக்கமின்மை பிரச்சனையும் அதிகரிக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில், தினமும் மாலையில் துளசி டீ குடித்து வந்தால், அது நல்ல தூக்கத்தைப் பெற பெரிதும் உதவியாக இருக்கும்.மேலும், உங்கள் வாழ்நாள் அளவையும் அதிகரிக்கும்.

55
Weight Loss Tips:

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்

இந்த டீயை உட்கொள்வதால் நீண்ட நாள் இருமல், சளி, காய்ச்சல் போன்ற நோய்கள் வராமல் பாதுகாக்கும். உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகரிக்கும். அதுமட்டுமின்று, துளசி டீ குடிப்பதன் மூலம், ஒருவர் உடலில் நேர்மறை சக்தியை உணர்கிறார். நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்க இந்த டீ உதவும். 

 மேலும் படிக்க...Sani Peyarchi: சனி பகவான் ராசி மாற்றம்..இன்னும் 110 நாட்களில் இந்த ராசிகளுக்கு சனியின் நேரடி அருள் கிடைக்கும்

Read more Photos on
click me!

Recommended Stories