பொதுவாக தேநீர்கள் இந்தியர்களை ஒருங்கிணைப்பதாக கூறப்படுகிறது, தற்போது இதனை வெளிநாடுகளிலும் விரும்ப தொடங்கிவிட்டனர். அப்படியாக, உலகளவில் அதிகமான மக்களால் ரசிக்கப்படும் ஒரு அற்புதமான பானம் என்றால் சந்தேகத்திற்கு இடமில்லாமல் அதற்கு பதில் தேநீர் தான் என்று சொல்லலாம். ஆனால், இது நமக்கு பல்வேறு உடல் நலம் பாதிப்புகளை உண்டாக்கும் என்கின்ற அச்சம் நம்மிடம் இருந்தது..இந்நிலையில், அதனை உடைக்கும் வகையில் புதிய ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது.