குளிர்காலத்தில் குளிரைத் தாங்க முடியாமல் அனைவரும் இரவில் தூங்கும் முன் போர்வை போர்த்திக் கொள்கிறோம். ஆனால், நம்மில் பலருக்கு கோடையிலும் போர்வை போர்த்தும் பழக்கம் உண்டு. இது ஆளுமையின் அடையாளம் என உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். தினமும் போர்வை மூடி தூங்குபவர்களின் குணாதிசயங்கள் என்னவென்று இந்த பதிவில் காணலாம்.
24
போர்வை மூடி தூங்குபவர்களின் குணாதிசயங்கள் :
1.பாதுகாப்பின்மை உணர்வு அதிகம் உள்ளவர்கள் :
போர்வை போர்த்தும் பழக்கம் உள்ளவர்கள் பாதுகாப்பற்றவர்களாகவும், அமைதியான குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் அதிகமாக சிந்திப்பவர்கள் மற்றும் கற்பனைத் திறன் அதிகம் கொண்டவர்கள்.
2. அமைதியானவர்கள் :
தினமும் போர்வை மூடி தூங்குபவர்கள் பொதுவாக அமைதியானவர்கள் என்று சொல்லப்படுகிறது இவர்கள் எளிதில் கோபப்பட மாட்டார்கள் எல்லாவற்றையும் யோசித்து முடிவெடுப்பார்கள். எப்போதும் பாதுகாப்பான பாதையை மட்டுமே தேர்ந்தெடுப்பார்கள்.
34
3. அதிகமாக யோசிப்பாங்க!
இது நம்ம போர்வையால் மூடி தூங்கும் பழக்கம் உள்ளவர்கள் சிறிய விஷயங்களை கூட அதிகமாக யோசிப்பார்களாம். இவர்களுக்கு நிறைய கற்பனை திறன்கள் இருக்கும்.
4. உறவுகளுக்கு மதிப்பளிக்கும் நபர்கள் :
போர்வை போர்த்தும் பழக்கம் உள்ளவர்கள் உறவுகளுக்கு மதிப்பளிப்பார்கள். தூக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இவர்கள் பார்ப்பதற்கு கடினமாக இருந்தாலும், மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள்.
போர்வை மூடி தூங்குபவர்கள் தூக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். நல்ல தூக்கம் தான் உடலை ஆரோக்கியமாகும் மனநிலையை மேம்படுத்தும் என்று இவர்கள் நம்புகிறார்கள். அதனால் தான் இவர்கள் எந்த பருவமானாலும் சரி தூங்குவதற்கு ஒரு போர்வை போதும் நீண்ட நேரம் தூங்குவார்கள்.
6. உணர்திறன் உடையவர்கள் :
இவர்கள் வார்த்தை கடுமையாக இருந்தாலும் உள்ளுக்குள் ரொம்பவே உணர்திறன் உடையவர்கள். சிறிய விஷயங்களுக்கு கூட ரொம்பவே புண்படுவார்கள். மற்றவர்கள் வலியை நன்கு புரிந்து கொள்வார்கள். சொல்லப்போனால் இவர்கள் ரொம்பவே இரக்கமுள்ளவர்கள்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.