நீதா அம்பானிக்கு டப் கொடுக்கும் தமிழிசை சவுந்தரராஜன்!! எந்த விஷயத்தில் தெரியுமா.?

First Published | Sep 27, 2024, 2:52 PM IST

தமிழக அரசியல் பிரபலமும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்திர ராஜன் தன்னிடம் உள்ள சேலைகள் கலெக்‌ஷன் தொடர்பாக வியக்கவைக்கும் தகவலை வெளியிட்டுள்ளார்.

சேலையின் வகைகள்

பெண்களின் விருப்பமான சாய்ஸ் என்ன தெரியுமா.?

உலகின் மிகப் பழமையான ஆடை வடிவங்களில் ஒன்றாக சேலை கருதப்படுகிறது. பல பெண்களுக்கு விருப்பமான சாய்ஸ். ஆனால், புடவையைத் தேர்வு செய்வதுதான் சிரமமானது. விரும்பும் நிறத்தில் விருப்பமான டிசைன் கிடைக்காது.அலுவலகத்திற்கு ஒரு விதம், விசேச நாட்களில் ஒரு விதம், வீட்டிற்குள், வெளியில் என இடத்திற்கு தகுந்தாற் போல சேலை அணியவே விரும்புகிறார்கள். அந்த வகையில் நடிகைகள் முதல் அரசியல் பிரபலங்கள் வரை கலர் கலரில் சேலை கட்டுவார்கள்.

குறிப்பாக தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர்கள் கட்டும் சேலையின் கலர் மற்றும் டிசைனை பார்ப்பதற்காகவே ஒரு காலத்தில் செய்தியை பார்க்கும் கூட்டமும் உண்டு. தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களிலும் சேலை பல்வேறு வண்ணங்களில் டிசைன்களில் கட்டுவது வாடிக்கையாகிவிட்டது. 

கின்னஸ் சாதனை சேலை

அதிக விலை கொண்ட சேலை

இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் பாரம்பரியமும், கலாசாரமும், ரசனை மற்றும் கலைநயத்தில் மாறுபட்டு இருக்கிறது. இருந்தாலும் அந்தந்த மாநிலத்தில் உருவாகும் சேலைகளை மற்ற மாநில பெண்கள் ஆர்வமுடன் கட்டி வருகிறார்கள். இதில் கேரளா மாடல் சேலை மிகவும் பிரபலமாகும். மேலும் ஒவ்வொரு பெண்களும் தங்களது வீட்டின் பீரோவில் நூற்றுக்கணக்கான புடவைகள் அடுக்கி வைத்திருப்பார்கள். அந்த வகையில் கோடீஸ்வரர்களின் வீட்டில் கேட்கவா வேண்டும். உலகிலேயே அதிக விலை கொண்ட புடவையை வைத்திருக்கும் நீதா அம்பானியாவர். இவரது மகன் திருமணத்தில் கட்டிய ஒவ்வொரு சேலையும் பல கோடி மதிப்புள்ளதாகும். நீதா அம்பானியிடம் உள்ள ஒரு சேலை கின்னஸ் உலக சாதனையே படைத்துள்ளது என்றால் பார்த்துக்கொள்ளங்கள்.

Tap to resize

நீதா அம்பானி சேலை

ரத்தின கற்களை கொண்ட சேலை

ரூபி, புக்ராஜ், மரகதம் மற்றும் முத்து போன்ற சில அரிய ரத்தினக் கற்களை கையால் அலங்கரித்த சேலையாகும். இந்த சேலையானது 35 பெண் கைவினைஞர்களால் தயாரிக்கப்பட்டதாகும். இது போன்று ஆயிரக்கணக்கான சேலைகள் நீதா அம்பானியிடம் உள்ளது. இந்தநிலையில் தமிழக அரசியல் பிரபலமும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்திர ராஜன் தன்னிடம் உள்ள சேலைகள் கலெக்‌ஷன் தொடர்பாக வியக்கவைக்கும் தகவலை வெளியிட்டுள்ளார். யூ டியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டிக்கொடுத்துள்ளார். அப்போது அவரிடம் செய்தியாளர் ஒரு கேள்வி கேட்கிறார்.

தமிழிசை சேலை கலெக்‌ஷன்

தமிழிசை சேலை கலெக்‌ஷன்

ஒரு புடவையை எத்தனை நாட்களுக்கு பிறகு மறுபடியும் கட்டுவீர்கள்.? அதற்கு  தமிழிசை சவுந்திர ராஜன் ஒரு வருடத்திற்கு ஒரு முறை தான் ஒரு சேலையை கட்டுவேன் என தெரிவிக்கிறார். அப்படி என்றால் நிறைய புடவை வாங்க வேண்டுமே என்ற கேள்விக்கு நிறைய புடவை உள்ளது. ரொம்ப நாட்களாக சேகரித்து வருவதாக கூறுகிறார். சேலைகளை வைப்பதற்காகவே நிறைய பீரோ வேண்டுமே என எத்தனை வைத்துள்ளீர்கள் என்ற கேள்விக்கு அதனை சொல்ல முடியாது. நிறைய வைத்துள்ளேன் என தெரிவிக்கிறார். 
 

தமிழிசையிடம் இத்தனை சேலை கலெக்‌ஷனா.?

தமிழிசையிடம் இத்தனை சேலை கலெக்‌ஷனா.?

புடவைக்கு ஏற்ற நிறத்தில் ஆபரணங்கள் அணிவீர்களா.? என்ற கேள்விக்கு சேலை என்ன கலரில் உள்ளதோ அதற்கு ஏற்றார் போல் கலரில் ஆபரணங்களும் அணிவேன் புடவையை எடுக்கும் போது அந்த ஆபரணங்களின் நிறமும் மனதில் வந்து விடும். எனவே புடவைக்கு ஏற்றது போல் ஆபரங்கள் மாற்றுவேன், ஆபரணங்களுக்கு ஏற்ப புடவையை மாற்றுவேன். ஆனால் கட்சியையும் மாற்றவில்லை. கொள்கையும் மாற்றவில்லை என தெரிவிக்கிறார். ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 4 சேலை மாற்றுவேன் என தெரிவித்தார். குறைந்த பட்சம் 2 சேலை உடுத்துவேன் என கூறிகிறார். மேலும் பட்டு சேலை தான் அதிகமாக கட்டுவேன். எங்கள் அம்மா தான் பட்டு பாவாடை, தாவனி வாங்கி கொடுப்பார்கள்.கட்சி நிகழ்ச்சியில் காட்டன் சேலை கட்டுவது தான் வசதியாக இருக்கும் என தெரிவித்துள்ளார். 

சேலையின் விலை என்ன தெரியுமா.?

சேலையின் விலை என்ன தெரியுமா.?

அதிகபட்சமாக 10 ஆயிரம் முதல் 15ஆயிரம் விலையில் சேலை இருப்பதாகவும் குறைந்த பட்சமாக 300 ரூபாய்க்கும் சேலை வாங்கி இருப்பதாக கூறினார். சேலை நன்றாக இருந்தில் எந்த நிறத்திலும் இருந்தாலும் எடுத்துவிடுவேன் என தெரிவித்துளார். பிடித்த நிறம் என்று பார்க்கும் போது மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம் பிடிக்கும் அதே நேரத்தில் கருப்பு நிற சேலை பிடிக்காது என கூறியுள்ளார். அடுத்ததாக வளையல் தொடர்பான கேள்விக்கு  தெலங்கானா போன பிறகு தான் வளையல் போட ஆரம்பித்தேன். தமிழக்தில் வளையல்கள் இல்லை, தெலங்கானாவில் அழகு அழகான வளையல்கள், கலர் வளையல்கள் உள்ளது.  தெலங்கானா போன பிறகு ஏற்பட்ட மாற்றம். சார்மினார் சுற்றி வளையல் கடைகள் உள்ளது அங்கு தான் நிறைய வண்ண வளையல்கள் வாங்கியதாக தமிழிசை தெரிவித்துள்ளார் 

Latest Videos

click me!