சில பழைய படங்களில் கதாநாயகர்கள் சவரம் செய்யும்போது மூக்கில் உள்ள முடியையும் வெட்டுவதை காணமுடியும். சலூன் கடைகளிலும் மூக்கில் உள்ள முடிகளை வெட்டிவிடுவார்கள். அது ஏன் என எப்போதாவது சிந்தித்துள்ளீர்களா? சிலர் தங்களுடைய முகத்தின் அழகுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
இதன் காரணமாக முகத்தில் உள்ள முடிகளை அடிக்கடி சவரம் செய்வார்கள். மீசை வளரும்போது மூக்கில் உள்ள முடிகளும் வளர்ச்சியடையும். அதனால் மீசையை சவரம் செய்யும்போது மூக்கில் உள்ள முடிகளையும் வெட்டுவார்கள். ஆனால் முகத்தில் வளரும் முடியை போல மூக்கில் வளரும் முடியை வெட்டுவது சரியா?
பெரும்பாலும் ஆண்கள் தான் இப்படி வெட்டிக் கொள்வார்கள். பெண்கள் அதை கண்டு கொள்வதில்லையே என சிலருக்கு கேள்வி எழலாம். ஏனென்றால் மூக்கில் உள்ள முடிகள் நன்மை செய்வதாகவும் ஒரு நம்பிக்கை உள்ளது.
25
Is it safe to trim nasal hair in Tamil
அதாவது நமது மூக்கிலுள்ள முடி நாம் சுவாசிக்கின்ற காற்றினை மாசுக்களின்றி வடிகட்டி, அதில் உள்ள வைரஸ், பாக்டீரியா தொற்றுகளை உடலுக்குள் அனுமதிக்காமல் மூக்கிலேயே தடுக்கிறது என சொல்லப்படுகிறது. இது அறிவியல் பூர்வமாக சரியா என்பது குறித்து பலருக்கும் தெரிவதில்லை. அது குறித்து இங்கு காணலாம்.
மூக்கில் உள்ள முடியின் சில தகவல்கள்:
மூக்கில் வளரும் முடி 0.3 முதல் 0.5 மிமீ தான் ஒருநாளுக்கு வளரும்.
சராசரியாக மூக்கில் உள்ள முடியின் நீளம் 5 முதல் 6 மிமீ தான்.
மூக்கில் வளரும் முடிகள் தான் நாம் சுவாசிக்கும்போது உள்ளிழுக்கும் காற்றை சூடாகவும், ஈரப்பதமாகவும் மாற்ற உதவுகிறது.
மூக்கில் வளரும் முடியை வெட்டுவது நமக்கு சில நன்மைகளையும் தீமைகளையும் செய்கிறது. முதலில் நன்மைகளை காணலாம்.
மூக்கில் வளரும் முடியை குறிப்பிட்ட நாளுக்கு ஒரு முறை வெட்டுவதால் முகத்தின் தோற்றம் அழகாகும்.
தொடர்ச்சியாக மூக்கின் முடியை வெட்டாமல் காடு போல வளர்த்து விடுவதால் தூசுகள், பாக்டீரியா போன்றவை அங்கு தங்கிவிட வாய்ப்புள்ளது. முடியை சரியான நேரத்தில் வெட்டுவதால் இந்த பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
மூக்கில் வளரும் முடியை வெட்டுவது ஒவ்வாமை ஏற்படுவதை தவிர்க்க உதவும். ஏனென்றால் ஒவ்வாமை உண்டாக்கும் வைரஸ், தூசிகளை உள் நுழையாமல் தடுக்கலாம்.
மூக்கில் வளரும் முடிகள் தான் இயற்கையான வடிகட்டியாக செயல்படுகிறது. காற்றில் பறந்து வரும் பூக்களின் மகரந்தம், தூசிகள், பாக்டீரியாக்கள் உள்ளே நுழையாமல் மூக்கின் முடிகளிலேயே தங்கி விடுகிறது. இப்படியாக இயற்கை வடிகட்டி போல மூக்கின் முடிகள் செயல்படுகின்றன. மூக்கில் உள்ள முடியை வெட்டுவதால் பாக்டீரியா உள்நுழைய வாய்ப்பு ஏற்படலாம். சிலருக்கு நாசிகளில் எரிச்சல், வீக்கம் ஏற்படும். நாசி துவாரங்களை ஒட்டியபடி வெட்டுவதால் காயம் ஏற்பட வாய்ப்புள்ளது.
மூக்கில் உள்ள முடிகளை வெட்டலாமா? ஆய்வுகள் சொல்லும் விளக்கம்!
1986களிலே மூக்கு முடி வெட்டுவது குறித்து ஆய்வு செய்யப்படுள்ளது. இதனை மருத்துவர்கள் 'வெஸ்டிபுல்' என சொல்வார்கள். லான்செட்டில் என்ற மருத்துவ இதழில் வெளியான ஆய்வில் மூக்கு முடிகள் வடிகட்டியாக செயல்படக்கூடும் என சொல்லப்பட்டுள்ளது. மூக்கு முடிகளில் நுண்ணுயிரிகள் சிக்கிக் கொள்ள வாய்ப்புள்ளதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.
55
Is it safe to trim nasal hair in Tamil
மற்றொரு ஆய்வில், மூக்கில் அதிகமாக முடி இருப்பவர்களுக்கு ஆஸ்துமா நோய் தாக்கம் ஏற்படுவது குறைவு என கண்டறியப்பட்டுள்ளது. அந்த ஆய்வில் மூக்கு முடிகள் வடிகட்டி போல செயல்படுவதாக தெரியவந்தது.
2015 ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஒரு ஆய்வில் மூக்கு முடியை வெட்டுபவர்களை விட முடி வெட்டாமல் வைத்திருப்பவர்கள் ஆரோக்கியமாக இருப்பது தெரிய வந்துள்ளது. இப்படி ஆய்வுகள் மூக்கு முடியை வளர்ப்பதற்கு ஆதரவாக வந்தாலும், மூக்கு முடிகள் வெட்டுவது தொற்றுகளை ஏற்படுத்தும் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் ஏதும் இல்லை. உங்களுக்கு மூக்கு முடி வெட்டிய பின்னர் சுவாசத்தொற்று ஏற்பட்டால் மருத்துவரை அணுகுங்கள்.
யார் தவிர்க்க வேண்டும்?
நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள்
சைனஸ் மற்றும் நாசி தொற்று பாதிப்பு உள்ளவர்கள்
இரத்தப்போக்கு தொடர்பான கோளாறு உள்ளவர்கள்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.