Follow these Vastu Tips
இதற்கு வாஸ்து, சாஸ்திரத்தின் படி வீட்டில் சில பொருட்களை மாற்றி அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அது என்னென்னெ பொருட்கள் என்பதை பார்ப்போம்.
செய்ய வேண்டியவை என்ன..?
1. கதவினை படுக்கை அறையின் வடக்கு அல்லது கிழக்கு ஒட்டியே அமைக்க வேண்டும். மேலும், தென் மேற்கு மூலையில் ஜன்னல் இருந்தால் செல்வம் பெருகும், குழந்தையில்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
2. படுக்கையை மூலையில் அமைக்கக் கூடாது. கட்டிலின் 3 புறமும் நடக்கும் வகையிலும் அமைக்க வேண்டும். பால்கனிக்கு கதவு அவசியம் இருக்க வேண்டும்.
Follow these Vastu Tips
3. கட்டில் சந்தனமரம், பலாமரம், மாமரம், வேம்பு, தேக்கு போன்றவற்றால் செய்தால் நல்லதென வாஸ்து சாஸ்திரம். கட்டில் தலைப்பகுதி சற்றே உயரம் இருப்பது நல்லது. இதனால் உறக்கமும் நன்றாக வருமாம்.
4. கட்டிலுக்கு மெத்தை வாங்கப் போகும் போது இலவம் பஞ்சு மெத்தைகளை வாங்கலாம் என்று வாஸ்து கூறுகிறது.
5.ஒரு சிறிய கிண்ணத்தில் கல் உப்பை வைத்திருந்தால் கெட்ட கனவுகள் வெகுவாக குறையும். அதேபோன்று, படுக்கை அறையில் அன்பை தூண்டும் மீன்கள், இரட்டை வாத்துக்கள் போன்ற ஓவியங்கள், படங்கள் இடம் பெறுவது நல்லது