குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தீபாவளி பண்டிகையானது விரைவில் வரப்போகிறது. இருந்தபோதிலும் இந்த பண்டிகை நெருங்க நெருங்க இல்லத்தரசிகள் மிகவும் சிரமமாக உணரும் ஒரு விஷயம் எதுவென்றால் அது தீபாவளிக்கு முன்னதாக வீட்டை சுத்தம் செய்வது தான். அதிலும் குறிப்பாக சமையல் அறையை சுத்தம் செய்வது மிகப்பெரிய சவாலானது என்றே சொல்லலாம்.
ஆம், சமையல் அறையில் இருக்கும் பழைய பாத்திரங்கள், அலமாரிகள் என எதுவாக இருந்தாலும் தீபாவளிக்கு முன்னதாக அனைத்து பொருட்களையும் சுத்தம் செய்வது வழக்கம்.
24
Diwali 2024 Cleaning Tips In Tamil
அந்தவகையில் இல்லத்தரசிகள் சமையலறையில் அதிகம் பயன்படுத்துவது கேஸ் ஸ்டவ் தான். ஒரு நாளைக்கு பலமுறை கேஸ் ஸ்டவ் பயன்படுத்தப்படுகிறது. மேலும் சில சமயங்களில் உணவும் சிந்திவிடும்.
இதனால் கேஸ் ஸ்டவ் மற்றும் கேஸ் பர்னர் எண்ணெய் படிந்து அழுக்காகி சுத்தம் செய்வதற்கு மிகவும் கடினமாக இருக்கும். அதுபோலவே சில உணவுகளை இரும்பு கடாயில் சமைத்தாலும் அதையும் சுத்தம் செய்வது சிரமம் ஏற்படுகிறது.
இத்தகைய சூழ்நிலையில், இந்த தீபாவளிக்கு கேஸ் பர்னர் மற்றும் இரும்பு கடாயை சுத்தம் செய்வதற்கும், உங்களது வேலையை மிகவும் எளிதாக்குவதற்கும் சில ஹேக்குகள் இந்த பதிவின் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை நிச்சயம் உங்களுக்கு உதவும்.
கேஸ் பர்னரை சுத்தம் செய்ய ஒரு கிண்ணத்தில் பேக்கிங் சோடா மற்றும் வினிகரை சேர்த்து அவற்றை நன்பு கலந்து, அந்த பேஸ்டை கேஸ் பர்னரில் தடவவும். சிறிது நேரம் கழித்து ஒரு ஸ்க்ரப் கொண்டு நன்கு சுத்தம் செய்யவும். பிறகு ஈரமான துணியைக் கொண்டு சுத்தம் உடைத்து எடுக்கவும். இப்படி செய்தால் கேஸ் பர்னர் முன்பை விட மிகவும் சுத்தமாக இருக்கும்.
இரும்பு சட்டிகள், கடாய்கள் அடிக்கடி துருப்பிடித்து விடும். எனவே அதை சுத்தம் செய்வதற்கு முதலில் இரும்பு கடாயை நன்கு சுத்தம் செய்யவும். பிறகு ஒரு துணியைக் கொண்டு நன்கு துடைத்து காய வைக்கவும். இப்போது எண்ணெய் சேர்த்து ஒரு துணியின் உதவியுடன் எல்லா பக்கங்களில் இருந்தும் கடாயில் தடவவும். இப்படி செய்தால் இரும்பு பாத்திரம் துடி பிடிக்காது.