பலரும் செரிமான பிரச்சனைகளை அனுபவித்து வருகின்றனர். நாம் சாப்பிடும் உணவு சரியாக ஜீரணமாகவில்லை என்றால், வயிற்று வலி, வாந்தி உள்ளிட்ட பல பிரச்சனைகளை ஏற்படக்கூடும். மேலும் வயிற்று உப்புசம், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
உடற்பயிற்சியின்மை, தூக்கமின்மை, ஆரோக்கியமற்ற உணவு மற்றும் துரித உணவு ஆகியவை செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன.
செரிமான பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்கும் ஆரோக்கியமான குடலுக்கும் நல்ல தூக்கத்தை பராமரிப்பது மிகவும் முக்கியம். எனவே செரிமான பிரச்சனைகளை தவிர்க்க உதவும் உணவுகள் குறித்து பார்க்கலாம்.
தயிரில் ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் உள்ளன. இது குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இது பல செரிமான பிரச்சனைகளை எதிர்த்து போராட உதவுகிறது. தினமும் மதிய உணவுடன் சிறிது தயிர் சாதம் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.
இஞ்சி செரிமானத்தை சீராக்க உதவுகிறது, இதனால் வயிற்றில் உணவு வேகமாக செல்கிறது. செரிமான பிரச்சனைகளை தீர்க்க இஞ்சி ஒரு சிறந்த உணவுப் பொருளாகும், ஏனெனில் இது அஜீரணத்தின் பொதுவான அறிகுறிகளான வயிற்று உப்புசம் மற்றும் வாயுப் பிரச்சனை போன்றவற்றை எதிர்த்துப் போராட உதவுகிறது.
மிளகில் உள்ள மெந்தால் செரிமான பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது. இது வாந்தி மற்றும் நெஞ்செரிச்சலுக்கு எதிராக போராடவும் உதவும்.
பூண்டின் சக்திவாய்ந்த பண்புகள் அனைத்து செரிமான பிரச்சனைகளுக்கும் உதவுகிறது. அதன் கலவைகள் நல்ல குடல் பாக்டீரியாவை உருவாக்குகின்றன, அவை செரிமான மண்டலத்தில் நேர்மறையான விளைவைக் கொண்டுள்ளன.
அஜீரணம், எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி (IBS), இரைப்பைஉணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் (GERD), குமட்டல் மற்றும் பல பிரச்சனைகளுக்கு சிறந்த நிவாரணியாக பூண்டு உதவுகிறது.