
இன்றைய காலகட்டத்தில் சாக்ஸ் இல்லாமல் ஷூக்களை அணிவது என்பது ட்ரெண்டாக மாறிவிட்டது. ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் இதை பின்பற்றுகிறார்கள். குறிப்பாக இளைஞர்கள் சாக்ஸ் அணிவதை மறந்துவிட்டார்கள். இது இன்றைய ட்ரெண்டாக இருந்தாலும் உங்கள் ஆரோக்கியத்திற்கு இந்த பழக்கம் நல்லதல்ல என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
சாக்ஸ் இல்லாமல் ஷூஸ் அணிந்தால் ஸ்டைலாக இருக்கும் என்று பலர் சொல்லுவதை நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். இது உண்மைதான் ஆனால்.. பாதுகாப்பானது அல்ல. ஆம், இப்படி சாக்ஸ் இல்லாமல் நீங்கள் ஷூக்களை மட்டும் அணிந்தால் உங்கள் உடல்நலம் மிகவும் பாதிக்கப்படும். இந்த பழக்கத்தால் என்ன நடக்கும் என்று இப்போது இங்கு விரிவாக தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
பூஞ்சை தொற்று : சாக்ஸ் இல்லாமல் ஷூக்களை அதிக நேரம் அணிந்தால் கால்களில் கண்டிப்பாக வியர்வை வெளியேறும். இது சாதாரண விஷயம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் சாக்ஸ் இந்த வியர்வையை உறிஞ்சி உங்கள் பாதங்களை உலர வைக்க உதவுகிறது. ஆனால் நீங்கள் சாக்ஸ் இல்லாமல் ஷூ அணிந்தால் கால்களில் ஈரப்பதம் அதிக நேரம் இருக்கும். இதனால் பூஞ்சை, பாக்டீரியாக்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இது பாக்டீரியா, பூஞ்சை தொற்றுகள் போன்ற நோய்களுக்கு வழிவகுக்கும்.
கால்களில் கொப்புளங்கள் : சாக்ஸ் நமது பாதங்களுக்கும், ஷூக்களுக்கும் இடையில் ஒரு பாதுகாப்பு கவசமாக செயல்படுகிறது. ஆனால் நீங்கள் நீண்ட நேரம் சாக்ஸ் இல்லாமல் ஷூ அணிந்து நடந்தாலோ அல்லது ஓடினாலோ கால்களில் கொப்புளங்கள் வர வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி, இது உங்களுக்கு அரிப்பு மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும். இது தவிர, சாக்ஸ் அணியாமல் ஷூக்களை மட்டும் அணிந்தால் சில சமயங்களில் ஷூக்கள் இறுக்கமாக இருப்பதாக உணரலாம். இதனால் உங்கள் பாதங்களில் காயம் ஏற்படும் அபாயம் உள்ளது. இறுக்கமான ஷூக்களுக்கு சாக்ஸ் அணிந்தால் இந்த பிரச்சனை பெருமளவு குறையும்.
பாதத்தின் தோல் தொற்று : நீண்ட நேரம் சாக்ஸ் இல்லாமல் ஷூ அணிவது கால்களில் ஈரப்பதத்தை அதிகரிக்கும். மேலும் உராய்வும் ஏற்படுகிறது. இதனால் தோல் தொற்றுகள் ஏற்படுகின்றன. இந்த தொற்று அதிகரித்தால் செல்லுலிடிஸ் போன்ற ஆபத்தான பிரச்சனைகள் வரும். இதை ஆரம்பத்திலேயே கவனிக்காவிட்டால் நிலைமை மோசமாகிவிடும். எனவே உங்கள் பாதத்தில் ஏதேனும் தொற்று நீண்ட நாட்களாக இருந்தால் உடனே மருத்துவரை அணுகவும்.
இதையும் படிங்க: மழை வரப்போகுது.. லெதர் ஷூக்களை பராமரிக்க சூப்பரான டிப்ஸ்!
துர்நாற்றம் : சாக்ஸ் இல்லாமல் ஷூ அணிவதால் உங்கள் பாதங்களில் ஈரப்பதம் அதிகரிக்கும். இதனால் பாதங்களில் பாக்டீரியாக்கள் பெருகும். இதனால் உங்கள் பாதங்களில் இருந்து அடிக்கடி துர்நாற்றம் வரும். குறிப்பாக, சாக்ஸ் இல்லாமல் லெதர் ஷூக்களை அணியும் போது துர்நாற்றம் அதிகமாக இருக்கும். இதனால் சில சமயங்களில் நீங்கள் மிகவும் சங்கடப்பட நேரிடும். இந்த பிரச்சனைகள் எதுவும் வராமல் இருக்க சாக்ஸ் இல்லாமல் ஷூ அணிவதை தவிர்க்கவும். இது தவிர, சாக்ஸை தினமும் துவைத்து அணிவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: வாஷிங் மெஷினில் ஷூக்களை சுத்தம் செய்யலாமா?