
பேக்கிங் சோடா சமையலுக்கு மட்டுமின்றி, உங்களது வீட்டையும் சுத்தப்படுத்த உதவும் என்று உங்களுக்கு தெரியுமா? ஆம் உங்களது வீட்டை பளபளப்பாக வைக்க ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா போதும்.
பொதுவாகவே சமையலறையில் இருக்கும் எண்ணெய் பிசுக்கை போக்கவும், குளியலறை மற்றும் கழிவறையில் படிந்திருக்கும் மஞ்சள் கறைகளை நீக்கவும் வீட்டின் தரை சுவர்களில் படிந்திருக்கும் கறைகளை நீக்கவும் மிகவும் கடினமான வேலை. இதற்காக நாம் கடைகளில் கிடைக்கும் இரசாயன தயாரிப்புகளை பயன்படுத்துவோம். ஆனால், அவை சுவர் மற்றும் தரைகளில் பாதிப்பை ஏற்படுத்தும் மற்றும் கறைகளும் முழுமையாக நீங்காது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் எப்பேர்ப்பட்ட கறைகளையும் எந்த கஷ்டமுமின்றி சுலபமாக நீக்க பேக்கிங் சோடா நிச்சயம் உதவும். அது எப்படி உதவுகிறது என்று இங்கு விரிவாக நாம் பார்க்கலாம்.
வேண்டுமானால் பேக்கிங் சோடாவுடன், உப்பு மற்றும் எலுமிச்சை சாறு அல்லது பேக்கிங் சோடா, வினிகர் மற்றும் உப்பு இந்த கலவைகளையும் பயன்படுத்தி சமையலறையை சுத்தம் செய்யலாம்.
பேக்கிங் சோடா :
பேக்கிங் சோடா உப்பு மற்றும் காரக் கலவைக் கொண்ட ஒரு வெள்ளை படிக்க திடப்பொருள். இது சில உணவுப் பொருட்களை புளிக்க செய்து நொதிக்க வைக்கவும், மென்மையாக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
சமையலறையை சுத்தம் செய்ய பேக்கிங் சோடா :
சமையலறையை எவ்வளவுதான் சுத்தமாக வைத்தாலும் சமையலறையின் மேடை அடுப்பு ஆகியவற்றில் எண்ணெய் கரை படிந்து சமையலறையின் அழகை கெடுத்து விடும். சமையலறையின் சுவற்றில் எண்ணெய் கறை படித்திருந்தால் சுவரின் வண்ணம் நிறம் மாறி பார்ப்பதற்கு அசிங்கமாக இருக்கும். இந்த எண்ணெய் கறையைப்போக்குவது மிகவும் கடினமான வேலையாகும். பேக்கிங் சோடா உதவியுடன் இந்த கறைகளை மிகவும் எளிதாக நீக்கிவிடலாம்.
இதையும் படிங்க: வீட்டின் தரை கண்ணாடி போல் பளபளப்பாக இருக்க இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க..!!
பயன்படுத்தும் முறை :
இதற்கு ஒரு கிண்ணத்தில் சிறிதளவு பேக்கிங் சோடா, எலுமிச்சை சாறு, தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றை நன்கு கலந்து அதை சமையலறையில் எண்ணெய் பிசுப்பாக இருக்கும் இடத்தில் தெளிக்கவும். சிறிது நேரம் ஊற வைக்கவும். பிறகு வெதுவெதுப்பான நீரைக் கொண்டு நன்றாக துடைக்கவும். இப்படி செய்வதன் மூலம் சமையலறையில் இருக்கும் எண்ணெய் பிசுபிசுப்பு நீங்கி, பார்ப்பதற்கு பளபளப்பாக இருக்கும்.
பாத்ரூம் டைல்ஸ் சுத்தம் செய்வதற்கு பேக்கிங் சோடா :
பாத்ரூம் தரை மற்றும் சுவற்றில் உப்புக்கரை அழுக்கு மஞ்சள் கறை படிந்து பார்ப்பதற்கு அசிங்கமாக இருக்கும். ஆனால் பேக்கிங் சோடாவை கொண்டு இந்த கறைகளை எளிதாக நீக்கிவிடலாம்.
பயன்படுத்தும் முறை :
பாத்ரூம் டைல்ஸ் களில் பேக்கிங் சோடாவை கறை படிந்த எல்லா இடங்களிலும் டெலிகாவும் சிறிது நேரம் அப்படியே ஊற வைத்துவிட்டு பிறகு வழக்கம் போல் தண்ணீரை கொண்டு நன்கு தேய்த்து கழுவினால் கரை அழுக்குகள் நீங்கி தரை பளபளப்பாக இருக்கும். வேண்டுமானால் நீங்கள் பேக்கிங் சோடாவுடன் வினிகர் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளலாம்.
குளியலறை குழாயை சுத்தம் செய்ய பேக்கிங் சோடா :
குளியலறை நாம் அதிகமாக பயன்படுத்துவதால், அதன் குழாய்களின் மேற்பரப்பில் அழுக்கு உப்பு கறை படிந்துபார்ப்பதற்கு மோசமாக இருக்கும். இப்படி இருந்தால் வீட்டிற்கு வரும் விருந்தினர்களை முகம் சுளிக்க வைக்கும். மேலும் இவற்றை சுத்தம் செய்வதற்கு கடைகளில் ரசாயன தயாரிப்புகள் வாங்கி பயன்படுத்தினாலும் அதில் அரிப்பு ஏற்பட்டுவிடும். எனவே இவற்றை எளிதாக நீக்க பேக்கிங் சோடா உங்களுக்கு உதவும்.
பயன்படுத்தும் முறை :
ஒரு கிண்ணத்தில் மூன்று ஸ்பூன் பேக்கிங் சோடா எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நன்கு பேஸ்ட் போல் கலந்து அந்த பேஸ்ட்டை குழாயில் தடவி சுமார் அரை மணி நேரம் அப்படியே ஊற வைக்க வேண்டும். பிறகு குழாயை பிரஷ் உதவியுடன் கழுவவும் இப்படி செய்தால், குழாயில் இருக்கும் அழுக்குகள் நீங்கி பார்ப்பதற்கு பளிச்சிடும். வேண்டுமானால் பேக்கிங் சோடாவுடன் எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.
கார்பெட்டுகள் சுத்தம் செய்ய பேக்கிங் சோடா :
கார்ப்பரேட்டுகள் வாங்கிய கொஞ்ச நாட்களிலே அதில் அழுக்குகள் படிந்து நிறம் மாறி காணப்படும். மேலும் இதை துவைப்பதற்கு மிகவும் கடினமாக இருக்கும். எனவே அவற்றை எளிதாக சுத்தம் செய்வதற்கு பேக்கிங் சோடா உங்களுக்கு உதவும்.
பயன்படுத்தும் முறை :
இதற்கு ஒரு வாளியில் துணி துவைக்கும் பவுடர் உடன் நான்கு ஸ்பூன் பேக்கிங் பவுடர் மற்றும் ஒரு ஸ்பூன் வினிகர் ஆகியவற்றை சேர்க்கவும். பிறகு கார்ப்பரேட்டுகளை அதில் சுமார் 15 நிமிடம் ஊற வைத்து, பிறகு சுவைத்தால் அதில் இருக்கும் அழுக்குகள் மற்றும் பாக்டீரியாக்கள் நீங்கி பார்ப்பதற்கு புதியது போல் இருக்கும்.
இதையும் படிங்க: இட்லியை புஸ்ஸுன்னு வர்ரதுக்கு மாவில் பேக்கிங் சோடா யூஸ் செய்தால் இந்த பிரச்சனைகளும் ஃபிரீயாவே வந்துரும் !