1. ஆபத்தான ஃபார்மால்டிஹைடு கெமிக்கல்
துணிகள் சுருங்காமல் இருக்கவும், சாயம் போகாமல் பளபளப்பாக தெரியவும் தொழிற்சாலைகளில் ஃபார்மால்டிஹைடு ரெசின், அசோ டை போன்ற கெமிக்கல்களை பயன்படுத்துகிறார்கள். இந்த கெமிக்கல் நேரடியாக சருமத்தில் படும்போது, சருமம் சிவந்து போதல், கடுமையான அரிப்பு, கண் எரிச்சல் மற்றும் மூச்சுத்திணறல் கூட ஏற்படலாம். அமெரிக்கன் காண்டாக்ட் டெர்மடிடிஸ் சொசைட்டி இதை ஒரு முக்கிய அலர்ஜி காரணியாக அறிவித்துள்ளது.
2. சாயத்தால் வரும் அலர்ஜி
டார்க் கலர் ஜீன்ஸ், கருப்பு அல்லது சிவப்பு நிற துணிகளில் அதிக சாயம் இருக்கும். இந்த சாயம் வியர்வையுடன் கலந்து சருமத்திற்குள் ஊடுருவும். இதனால் காண்டாக்ட் டெர்மடிடிஸ் என்ற தோல் நோய் வருகிறது. நீண்ட நாட்களாக இப்படிப்பட்ட ரசாயனங்கள் சருமத்தில் படுவது உடல்நலத்திற்கு மிகவும் ஆபத்தானது.
3. கடைகளில் இருக்கும் அழுக்கு மற்றும் கிருமிகள்
கொஞ்சம் யோசித்து பாருங்கள், உங்களுக்கு முன் எத்தனை பேர் அந்த துணியை ட்ரையல் ரூமில் போட்டுப் பார்த்திருப்பார்கள்? அவர்களின் வியர்வை, தூசு, பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்கள் அந்த துணியிலேயே ஒட்டியிருக்கும். குடோனில் இருந்து கடைக்கு வரும் வரை தூசு, எலி, கரப்பான் பூச்சிகளின் நடமாட்டமும் அதில் இருந்திருக்கலாம். துவைக்காமல் உடுத்தினால், அந்த கிருமிகள் நேரடியாக உங்கள் உடலுக்குள் வந்துவிடும்.