அக்கறையான பெற்றோர்  'இதை' பண்ணமாட்டாங்க.. பிளாஸ்டிக் டிபன் பாக்ஸ் ஏன் வாங்கக் கூடாது தெரியுமா?

First Published | Nov 9, 2024, 12:08 PM IST

Plastic Tiffin Box Dangers For Kids : பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் மதிய உணவை பிளாஸ்டிக் டிபன் பாக்ஸில் அடைத்து கொடுக்கிறார்கள். ஆனால் அது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு மோசமானது என்று உங்களுக்கு தெரியுமா?

Plastic Tiffin Box Dangers For Kids In Tamil

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளை ரொம்பவே அன்பாகவும், அக்கறையாகவும் வளர்க்கிறார்கள். ஆனால் சில சமயங்களில் அவர்கள் சில தவறுகளை செய்கிறார்கள் அதனால் பாதிக்கப்படுவது அவர்களது குழந்தைதான்.

அது என்னவென்றால், பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பிளாஸ்டிக் டிபன் பாக்ஸில் மதிய உணவு மற்றும் ஸ்னாக்ஸ் ஆகியவற்றை அடைத்து ஸ்கூலுக்கு அனுப்பி வைக்கிறார்கள். இது தவிர குழந்தைகள் குடிக்கும் தண்ணீர் பாட்டில் கூட பிளாஸ்டிக் தான். ஆனால் இப்படி பிளாஸ்டிக் டிபன் பாக்ஸ்களை பயன்படுத்துவது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு தீங்கு என்று உங்களுக்கு தெரியுமா?

Plastic Tiffin Box Dangers For Kids In Tamil

தற்போது விதவிதமான பிளாஸ்டிக் பாக்ஸ்கள் கடைகளில் விற்பனையாகின்றன. அவை பார்ப்பதற்கு அழகாக இருப்பது மட்டுமின்றி விலையும் மலிவானவை. இதனால் பெற்றோர்கள் அதை வாங்கி சூடான உணவை அதில் அடைத்து தங்களது பிள்ளைக்கு கொடுக்கிறார்கள். 

ஆனால் பிளாஸ்டிக் பாக்ஸில்ல் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் உள்ளன. அவை குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மோசமான தீங்கு விளைவிக்கும். இதனால் குழந்தைகள் நீண்ட காலமாக உடல் கோளாறுகளால் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, பிளாஸ்டிக் டிபன் பாக்ஸில் உணவு சாப்பிடுவதால் குழந்தைகளின் உடல்நலத்திற்கு எந்த மாதிரியான தீங்கு ஏற்படும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

இதையும் படிங்க: நாள்தோறும் குழந்தைகளுக்கு முட்டை கொடுத்தால் 'இத்தனை' நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

Latest Videos


Plastic Tiffin Box Dangers For Kids In Tamil

பிளாஸ்டிக் துகள்கள்

சில சமயங்களில் பிளாஸ்டிக் உடைந்து சிறு துகள்களாக மாறும். அது மைக்ரோ பிளாஸ்டிக் என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய டிபன் பாக்ஸில் குழந்தைகளுக்கு உணவை அடைத்து கொடுத்தால், அது குழந்தைகளின் உடலில் நுழையும். இதனால் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைந்து குழந்தைகளுக்கு தொற்று நோய்கள் தாக்க ஆரம்பிக்கும்.

பாக்டீரியாக்கள்

பிளாஸ்டிக் டிபன் பாக்ஸில் பாக்டீரியாக்கள் எளிதில் உருவாகிவிடும். இதில் அடைத்து கொடுக்கப்படும் உணவை குழந்தைகள் சாப்பிட்டால் அவர்கள் நோய்வாய்ப்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. அதுவும் குறிப்பாக சில பெற்றோர் ஒரு டிபன் பாக்ஸை நீண்ட நாள் பயன்படுத்துவார்கள் மற்றும் சரியாக சுத்தம் செய்யாவிட்டால் அதில் பாக்டீரியாக்கள் குவிந்து காணப்படும். இதனால் குழந்தைகள் மோசமாக பாதிக்கப்படுவார்கள்.

Plastic Tiffin Box Dangers For Kids In Tamil

பிளாஸ்டிக் அடுக்கு உரியும்

பிளாஸ்டிக் டிபன் பாக்ஸை தொடர்ந்து பயன்படுத்தும் போது அதை தேய்க்க தேய்க்க அதன் மேல் அடுக்கு தானாகவே உரிய ஆரம்பிக்கும். எனவே இவை உணவுடன் கலந்து விடும். இதனால் குழந்தைகள் விரைவில் நோய்வாய்ப்படுவார்கள். எனவே இவற்றை தடுக்க குழந்தைகளுக்கு பிளாஸ்டிக் டிபன் பாக்ஸ்க்கு பதிலாக ஸ்டீல் டிபன் பாக்ஸ் பயன்படுத்துங்கள்.

இதையும் படிங்க:  குழந்தைகளுக்கு 'இனியும்' வெறும் பால் வேண்டாம்.. இந்த பொருள்களில் '1' போட்டு கொடுக்குறது தான் நல்லது!!

Plastic Tiffin Box Dangers For Kids In Tamil

குறிப்பு : உங்கள் குழந்தைக்கு இதுவரை நீங்கள் பிளாஸ்டிக் பாக்ஸில் உணவு அடைத்து கொடுத்தால் உடனே அதை நிறுத்துங்கள். ஒருவேளை பிளாஸ்டிக் டிபன் பாக்ஸ் கொடுக்க விரும்பினால், ஒரு மாதம் வரை மட்டுமே அது பயன்படுத்துங்கள். மேலும் நன்றாக சுத்தம் செய்து பயன்படுத்துங்கள். அதுபோல உங்கள் குழந்தைகளுக்கு ஸ்டீல் பாட்டிலில் தண்ணீர் கொடுக்கவும்.

click me!