Published : Nov 09, 2024, 10:44 AM ISTUpdated : Nov 09, 2024, 10:53 AM IST
Herbs For Younger Looking Skin : நீங்கள் எப்போதும் இளமையாக இருக்க விரும்பினால், ஆயுர்வேதத்தில் சொல்லப்பட்டுள்ள சில மூலிகைகளை உங்களது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள் அதை முன்கூட்டிய முதுமையை தடுக்கும்.
இளமையாக இருக்க யாரு தான் விரும்ப மாட்டார்கள். பொதுவாக வயது அதிகரிக்கும் போது சருமத்தில் சுருக்கங்கள் வருவது இயல்புதான். ஆனால் சிலருக்கு நடுத்தர வயதிலேயே வயதான தோற்றம் தெரிய ஆரம்பிக்கும் இதற்கு வாழ்க்கை முறை, அதிகரித்து வரும் மாசுபாடு, மன அழுத்தம் மற்றும் மரபியல் கொஞ்சம் பல காரணங்கள் உள்ளன.
26
Herbs For Younger Looking Skin In Tamil
இவற்றை உங்களால் தடுக்க முடியாது. ஆனால் உங்களது சருமம் வேகமாக வயதாவதை நிறுத்த முடியும். இதற்கு ஆயுர்வேதத்தில் சொல்லப்பட்டுள்ள சில மூலிகைகள் உள்ளன அவற்றை உங்களது உணவில் சேர்த்துக் கொண்டால் மட்டும் போதும். உங்களது சரும பிரச்சனைகள் நீங்குவது மட்டுமின்றி, வயதான அறிகுறிகளும் குறையும். எனவே இந்த பதிவில் வயதான அறிகுறிகளை நீக்கும் சருமத்திற்கு மிகவும் பயனுள்ள 4 மூலிகைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
மஞ்சள் கடவுள் நமக்கு அளித்த பரிசு. மஞ்சள் சிறந்த மூலிகையாகும். ஆயுர்வேதத்தின்படி. மஞ்சள் பல பிரச்சினைகளுக்கு அருமருந்தாக பயன்படுத்தப்படுகிறது. மஞ்சள் சளி, இருமலுக்கு மட்டுமின்றி, ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், வீக்கத்தை குறைக்கவும், புற ஊதா கதிர்களில் இருந்து சேதம் ஏதும் ஏற்படாமல் உங்களை பாதுகாக்கவும் உதவுகிறது. மஞ்சளை உங்கள் உடலில் தேய்த்து குளித்தால் உங்களது சருமம் பிரகாசிக்கும் மற்றும் வயதான தோற்றம் தடுக்கப்படும்.
46
Herbs For Younger Looking Skin In Tamil
நெல்லிக்காய்
ஆயுர்வேதத்தில் நெல்லிக்காய் ஒரு அருமருந்தாக பயன்படுத்தப்படுகிறது. நெல்லிக்காய் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல சரும மற்றும் கண்களின் பராமரிப்புக்கும் பயன்படுத்தப்படுகிறது. நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சருமத்தை ஃபிரீ ரேடிக்கல்களில் இருந்து பாதுகாக்கிறது. முக்கியமாக வயதான அறிகுறிகளை குறைக்க நெல்லிக்காய் பெரிதும் உதவுகிறது. எனவே சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க தினமும் காலை ஒரு கிளாஸ் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கலாம்.
56
Herbs For Younger Looking Skin In Tamil
துளசி
துளசி உங்கள் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல் உங்களது அழகை பராமரிக்கவும் பெரிதும் உதவுகிறது. ஏனெனில் இதில் இருக்கும் பண்புகள் சருமத்திற்கு எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. எனவே இதை நீங்கள் உங்களது உணவில் சேர்ப்பதன் மூலம் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவது தடுக்கப்படும் மற்றும் உங்களது சருமத்தை மென்மையாகவும், நீரேற்றமாகவும் வைக்கும். எனவே இதை நீங்கள் தேநீரில் போட்டு குடிக்கலாம் அல்லது துளசி இலையை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.
66
ரோஸ்மேரி
சூரியனின் புற உதாக்கதிர்வீச்சால் சருமத்தில் கோடுகள், சுருக்கங்கள் சீக்கிரமே வந்துவிடும். இதை தடுக்க ரோஸ்மேரி உதவும். ரோஸ்மேரி சருமத்தை இளமையாக வைத்திருக்க முக்கிய பங்கு வகிக்கிறது. உங்களுக்கு டயட்டில் ரோஸ்மேரியை நீங்கள் தேநீரில் போட்டு குடிக்கலாம்.