வாஷிங் மெஷின் அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாகும். முன்பு கைகளால் துணியை துவைத்த காலம் போய், இப்போது வாஷிங் மெஷின் இல்லாமல் துணியை துவைக்க முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டோம். ஏனென்றால் இந்த காலத்தில் வாஷிங் மெஷின் இல்லாத வீடுகளை பார்க்கவே முடியாது. பெரும்பாலானோர் வீட்டில் கண்டிப்பாக வாஷிங் மெஷின் இருக்கும்.
25
Washing Machine Cleaning Tips In Tamil
வாஷிங் மெஷின் துணிகளை துவைக்கும் வேலையை எளிதாக்குகிறது என்றாலும், அதை அவ்வப்போது சுத்தம் செய்வது மிகவும் அவசியம். ஏனெனில், பலர் வாஷிங் மெஷினில் துணிகளை அடிக்கடி போட்டு துவைப்பார்களே தவிர அதை பராமரிக்க மறந்து விடுகிறார்கள்.
இதனால் வாஷிங் மெஷின் பழுதடைந்து விடும். அவர்கள் அதை கடைகளில் கொடுத்து மீண்டும் ரிப்பேர் பார்த்து பயன்படுத்தினால் கூட, அதை சரியாக பராமரிக்கவில்லை என்றால் முடிவில் பயன்படுத்த முடியாத நிலைக்கு வந்துவிடும்.
ஆனால் வாஷிங் மெஷினை சுத்தம் செய்வது கடினமாயிற்றே என்று நீங்கள் எண்ணினால், உங்களை வந்து வேலையை மிக எளிதாக்க தான் உங்களுக்கான சில டிப்ஸ் இந்த பதிவில் கொண்டு வந்துள்ளோம். அவற்றை பின்பற்றுவதன் மூலம் உங்கள் வீட்டில் இருக்கும் வாஷிங் மிஷினை எளிதாக சுத்தம் செய்து விடலாம்.
இதற்கு வீட்டில் இருக்கும் சில பொருட்கள் மட்டுமே போதும் தெரியுமா? ஆம், அவற்றின் உதவியுடன் உங்கள் வீட்டில் இருக்கும் வாஷிங் மெஷினை சுத்தம் செய்து விடலாம். சரி இப்போது வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து வாஷிங்மெஷினை எளிதாக சுத்தம் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
45
Washing Machine Cleaning Tips In Tamil
வாஷிங் மெஷினை எளிதாக சுத்தம் செய்வது எப்படி?
வினிகர் & பேக்கிங் சோடா
வாஷிங் மிஷினில் படிந்திருக்கும் அழுக்குகளை நீக்க வினிகர் மற்றும் பேக்கிங் சோடா உங்களுக்கு உதவும். இதற்கு 2 கப் வினிகரை வாஷிங் மெஷின் டிரம்மில் ஊற்றி அதிக ஸ்பீடில் ஒரு முறை இயக்கவும். பிறகு அரை கப் பேக்கிங் சோடாவை சேர்த்து அதேபோல மறுபடியும் செய்ய வேண்டும். வினிகர் மற்றும் பேக்கிங் சோடா வாஷிங் மெஷின் உள்ளிருக்கும் அழுக்கு மற்றும் பாக்டீரியாக்களை எளிதில் சுத்தம் செய்து விடும்.
சூடான நீர்
வாஷிங் மெஷின் சுத்தம் செய்ய சூடான நீர் பயன்படுத்தலாம். இதற்கு சூடான நீரில் சிறிதளவு கிளீனிங் பவுடரை சேர்த்து அதை வாஷிங்மெஷினில் ஊற்றி ஒரு முறை இயந்திரத்தை சுத்தம் செய்யும் முறையில் இயக்கவும். இப்படி செய்வதன் மூலம் வாஷிங் மிஷினில் படிந்திருக்கும் விடாப்பிடியான அழுக்குகள் சுலபமாக நீகங்கும்.
55
Washing Machine Cleaning Tips In Tamil
ஹைட்ரஜன் பெராக்ஸைடு
ஹைட்ரஜன் பெராக்ஸைட் தண்ணீரில் கலந்து, அதில் ஒரு சுத்தமான துணியை முக்கி, வாஷிங் மெஷினின் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் நன்கு சுத்தம் செய்வும். இப்படி செய்வதன் மூலம் கிரீஸ், பாசி, உப்பு நீர், அழுக்கு போன்ற அனைத்தும் நீங்கி சுத்தமாக இருக்கும்.