குழந்தை பிறந்து 6 மாதம் வரை 'தண்ணீர்' கொடுக்காதீங்க.. பலர் தெரியாமல் செய்யும் தவறு!!

Published : Feb 12, 2025, 02:54 PM ISTUpdated : Feb 12, 2025, 02:58 PM IST

Dangers Of Water For Infants : புதிதாகப் பிறந்த குழந்தைக்கு ஆறு மாதம் முடியும் வரை ஏன் தண்ணீர் கொடுக்கக் கூடாது? அப்படி கொடுத்தால் என்ன ஆகும் என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

PREV
15
குழந்தை பிறந்து 6 மாதம் வரை 'தண்ணீர்' கொடுக்காதீங்க.. பலர் தெரியாமல் செய்யும் தவறு!!
குழந்தை பிறந்து 6 மாதம் வரை 'தண்ணீர்' கொடுக்காதீங்க.. பலர் தெரியாமல் செய்யும் தவறு!!

உணவைப் போலவே தண்ணீர் நமக்கு மிகவும் முக்கியம். நம்முடைய உடலில் நீர்ச்சத்து குறையும்போது நீரிழப்பு பிரச்சனையை ஏற்படுத்தும். இதன் காரணமாக பல உடல்நல பிரச்சனைகளை வழிவகுக்கும். ஆகவே தான் மருத்துவர்கள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். அதன்படி ஆண்கள் ஒரு நாளைக்கு 3-4 லிட்டரும், தரும் பெண்கள் 2-3 லிட்டரும், குழந்தைகள் 1-2.5 லிட்டரும் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்லுகிறார்கள். இதைவிட குறைவாக குடித்தால் உடலில் நீரிழப்புக்கு ஆளாக நேரிடும். 

25
ஆறு மாதம் முடியும் வரை குழந்தைகளுக்கு ஏன் தண்ணீர் கொடுக்கக் கூடாது?

இருப்பினும், ஆறு மாதங்களுக்கும் குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கு இது பொருந்தாது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆம், புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு ஆறு மாதங்கள் முடியும் வரை தண்ணீர் ஒருபோதும் கொடுக்கவே கூடாது. அப்படி புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுத்தால் என்ன ஆகும்? என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

35
புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு ஏன் தண்ணீர் கொடுக்கக் கூடாது?

ஆறு மாதத்திற்கும் குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது என்பதற்கான சில காரணங்களை மருத்துவர்கள் சொல்கிறார்கள். அதாவது புதிதாக பிறந்த குழந்தையின் சிறுநீரகங்கள் ஆறு மாதங்கள் வரை முழுமையாக வளர்ச்சி அடையாது. இத்தகைய சூழ்நிலையில் அவர்களுக்கு தண்ணீர் கொடுத்தால் அதிகப்படியான நீர் மற்றும் சோடியம் அவர்களது உடலில் இருந்து நீர் வழியாக வெளியேற்றப்படும். இதனால் குழந்தைகள் கடுமையான உடல்நல பிரச்சனைகளால் பாதிக்கப்படுவார்கள்.

இதையும் படிங்க: மழை, குளிர்ல கூட குழந்தைகளை ஆரோக்கியமா வைத்திருக்க '5' அட்வைஸ்

45
புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுப்பதால் ஏற்படும் விளைவுகள்:

ஆறு மாதத்திற்கும் குறைவாக இருக்கும் குழந்தைக்கு தண்ணீர் கொடுப்பதால் சோடியம் குறைபாடு ஏற்படும். இதனால் அவர்களது மூளை செயல்பாடு பாதிக்கப்படும். இது நீண்ட காலத்திற்கு மனநல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இது தவிர குழந்தைகளின் முகம், கால் கைகளில் வீக்கம் தோன்றக்கூடும். கூடுதலாக ஊட்டச்சத்து குறைபாடு, மெதுவான வளர்ச்சி, எடை இழுப்பு போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.

இதையும் படிங்க:  குழந்தைகளுக்கு எந்த வயதில் அசைவம் கொடுத்தால் முழுச்சத்து கிடைக்கும் தெரியுமா?

55
என்ன கொடுக்கலாம்?

புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு ஆறு மாதம் வரை கண்டிப்பாக தாய்ப்பால் தான் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை அல்லது அவர்களுடன் ரொம்பவே சூடாக இருக்கும்போது ஒரு ஸ்பூனில் சிறிது தண்ணீர் கொடுக்கலாம். இருப்பினும், மருத்துவரிடம் ஆலோசித்த பிறகு தான் தண்ணீர் கொடுக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories