உஷார்... பிரியாணிக்கு தயிர் - வெங்காயம் வச்சு சாப்பிடுவீங்களா அப்போ இது உங்களுக்கு தான்!

First Published Sep 12, 2020, 7:18 PM IST

தயிருடன் சேர்த்து சாப்பிட கூடாத உணவு வகைகள் பற்றி தான் இதில் பார்க்கப்போகிறோம்...
 

பாலில் இருந்து எடுக்கப்படும் தயிரில் அதிக கால்சியம், விட்டமின் பி 2 மற்றும் விட்டவிம் பி12 , பொட்டாசியம் போன்ற பல சத்துகள் நிறைந்துள்ளதால், கண்டிப்பாக மத்திய உணவின் போது, சிறிதளவு தயிர் எடுத்து கொள்வது உடல்நலத்திற்கு நல்லது என கூறுவார்கள்.
undefined
அதே நேரத்தில், சில நேரங்களில்... தயிரை சில எதிர்மறையான உணவு பொருட்களுடன் எடுத்து கொண்டால் அது உடல் உபாதைகளை ஏற்படுத்தும்.
undefined
பிரியாணி பிரியர்கள் பலரும், கெட்டி தயிரில் வெங்காய பச்சடி இல்லாமல் சாப்பிடுவது இல்லை. இது பல நேரங்களில் உடலுக்கு பிரச்னையை ஏற்படுத்துவது இல்லை என்றாலும், சில நேரங்களில் உடல் நலத்தை கெடுக்க வாய்ப்புள்ளது. ஏனெனில், தயிர் குளிர்ச்சி தரக்கூடியது. வெங்காயம் சூட்டை கிளப்பக் கூடியது. இந்த இரண்டு எதிர் தன்மைக் கொண்ட உணவை ஒன்றாக இணைத்து சாப்பிடுவது உடல் உபாதையை உண்டாகும் வாய்ப்பு உண்டு.
undefined
மாம்பழமும் மிகவும் சூடு என்பதால், தயிர் சாதத்துடன் மாம்பழம் சேர்த்து உண்பவர்கள் அதனை குறைத்து கொள்வது நலம்.
undefined
மீன் அதிக புரதச்சத்து நிறைந்த உணவு. எனவே இதனையுடன் தயிர் எடுத்து கொண்டால் செரிமானமின்மை, வயிற்று வலி போன்றவை ஏற்பட கூடிய வாய்ப்புகள் உண்டு.
undefined
பாலில் இருந்து தயிர் வந்தாலும் இரண்டையும் ஒரே நேரத்தில் உட்கொண்டால் அப்படி சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு, அசிடிடி உண்டாகும்.
undefined
பொறித்த உணவுகளுடன் தயிர் எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும், இது செரிமான பிரச்னையை உண்டாக்க வாய்ப்பு உண்டு.
undefined
click me!