கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகள்! என்னென்ன தெரியுமா?

First Published Sep 5, 2020, 7:12 PM IST

உலக மக்களை கடந்து தற்போது தமிழகத்திலும் தலை விரித்தாடுகிறது கொரோனா தொற்று. இதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், நாளுக்கு தான் குணமாகி வீடு திரும்புபவர்கள் எண்ணிக்கையும் அதிகமாகி கொண்டே செல்கிறது...

சரி கொரோனாவில் இருந்து குணமடைபவர்கள் எந்தமாதிரியான உணவுகள் அதிகம் எடுத்து கொள்ள வேண்டும் என்பதை பார்க்கலாம் வாங்க..
 

உங்கள் உடல் மிகவும் பலவீனமாக உணர்வீர்கள் ஆகையால், அதிக கலோரிகள் நிறைந்த அரிசி உணவுகள், பருப்பு, கிழங்கு வகைகள், தானியங்கள் போன்றவை எடுத்து கொள்வது அவசியம்.
undefined
மீன், முட்டை, நட்ஸ், பால் சேர்ந்த உணவு வகைகள் எடுத்து கொள்வது விரைவில் நீங்கள் பலம் பெற உதவும்.
undefined
தினமும் தவறாமல் அதிக நீர் சத்து நிறைந்த பழ வகைகள் எடுத்து கொள்ளுங்கள். முக்கியமாக இரும்பு சத்து நிறைந்த பேரிச்சை பழம், எளிதில் கிடைக்க கூட வாழை, பப்பாளி, மற்றும் சிட்ரஸ் ஆசிட் நிறைந்த பழங்கள் எடுத்து கொள்வது நல்லது.
undefined
மத்திய உணவில் தவறாமல் ஏதேனும் ஒரு கீரை மற்றும், அதிக காய்கறிகளை எடுத்து கொள்ளுங்கள்.
undefined
நீங்க அருந்தும் பால் - டீ போன்றவற்றில் முடிந்த வரை இஞ்சி, சுக்கு போன்றவற்றை சேர்த்து குடியுங்கள். இரவு நேரத்தில் மஞ்சள் தூள் மற்றும் மிளகு தூள் சேர்த்து பால் அருந்துவது சளி பிரச்சனையில் இருந்து காக்கும்.
undefined
அடிக்கடி வெதுவெதுப்பான தண்ணீர் குடித்து கொண்டே இருங்கள்.
undefined
தண்ணீர் குடிப்பது சிரமமாக இருந்தால், பழ சாறு, மோர், சூப் போன்றவை அருந்துங்கள். இது எளிதில் உங்களை பழைய புத்துணர்ச்சி கொண்ட மனிதராக மாற்றும்.
undefined
click me!