உஷார்... அதிக பால் அருந்தினால் கூட ஆபத்து..! என்னென்ன பிரச்சனை வரும் தெரியுமா?

First Published Sep 2, 2020, 6:24 PM IST

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சி, என்கிற பழமொழிக்கு ஏற்ப, அதிக சத்துக்கள் நிறைந்த பால் அருந்துவது கூட சில சமயங்களில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன, இது குறித்த ஒரு தொகுப்பு இதோ..
 

பலருடைய காலை பொழுது, ஒரு கிளாஸ் பால் கலந்த டீ, காபி போன்றவற்றில் தான் துவங்குகிறது.
undefined
பாலில் கால்சியம், வைட்டமின் பி12, விட்டமின் டி, புரோட்டீன், பொட்டாசியம், மினரல்கள், போன்ற பல ஊட்டச்சத்துகள் உள்ளதால், மக்களின் வாழ்க்கையில் இன்றி அமையாத ஒன்றாக உள்ளது.
undefined
சரி பால் அதிகம் உட்கொள்வதால் எந்த மாதிரியான ஆபத்துகள் வர கூடும் என்பதை பற்றி பார்க்கலாம்.
undefined
அதிக அளவில் பால் குடிப்பதால் சிலருக்கு செரிமானப் பிரச்னை உண்டாகும். வாந்தி, குமட்டல், வயிறு மந்தமாக இருப்பது போல் உணர்ந்தால் அதிகம் பால் எடுத்து கொள்வதை தவிர்த்து விடுங்கள்.
undefined
சிலருக்கு பால் குடிப்பதால் ஒவ்வாமை, சரும அலர்ஜி உண்டாகும்.
undefined
பால் குடிப்பதால் எலும்புகள் உறுதியாகும் என்பது எந்த அளவிற்கு உண்மையோ, அதே சமையல் அதிக பால் குடிப்பதால் எலும்புகளுக்கு ஆபத்தும் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாம்.
undefined
நாள் ஒன்றுக்கு 2 கிளாஸுக்கு மேல் பால் குடித்தால் ஆண்களுக்கு இதய பாதிப்பு ஏற்படும் பிரச்னையும், பெண்களுக்கு சில வகையான புற்றுநோய்களை சந்திப்பார்கள் என்றும் BMJ நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
undefined
எனவே முடிந்தவரை பால் அதிகமாக நீங்கள் குடிப்பவராக இருந்தால், அதனை குறைத்து கொண்டு மாறாக, தயிர், மோர், வெண்ணை, சீஸ், பன்னீர் போன்று பாலில் செய்த உணவுகளை எடுத்து கொள்வது நல்லது.
undefined
click me!