எல்லோர் வீட்டு அலமாரியிலும் கிழிந்த அல்லது ஜோடி இல்லாத பழைய சாக்ஸ்கள் ஓரமாய் கிடக்கும். இனிமேல் எதற்கும் உதவாது என்று குப்பையில் தூக்கி எறிய அவசரப்படாதீர்கள். அதை வீணாக்காமல் வீட்டு உபயோகத்திற்கு எப்படி பயனுள்ளதாக மாற்றலாம் என்று யோசித்து பாருங்கள்
மொபைல் போன், லேப்டாப், டிவி ஸ்கிரீன் மற்றும் உங்களோட கூலிங் கிளாஸ் இதிலெல்லாம் சீக்கிரம் கீறல் (Scratches) விழுந்துடும். பழைய சாக்ஸை கையில் மாட்டிட்டு, லேசாகத் துடைத்து பாருங்கள். சாக்ஸின் மென்மையான துணி, எந்த கீறலும் இல்லாமல் தூசிகளை அப்படியே உறிஞ்சி எடுத்துடும்.
25
ஒட்டடை அடிக்க இனி கஷ்டப்பட வேண்டாம்:
சீலிங் ஃபேனை துடைக்கும் போது தூசி எல்லாம் நம்ம கண்ணுலயும், கீழ இருக்கிற மெத்தையிலயும் கொட்டும். அதுக்கு ஒரு சூப்பர் வழி இருக்கு. பழைய சாக்ஸை லேசாக நனைத்து, ஃபேன் ரெக்கைக்குள் 'உறை' மாதிரி மாட்டி அப்படியே பின்னோக்கி இழுங்கள். தூசி மொத்தம் சாக்ஸுக்குள்ளேயே லாக் ஆகிடும், கீழே ஒரு பொட்டு தூசிகூட விழாது!
35
அவசரக்கால ஐஸ் பேக் / ஹாட் பேக் :
திடீர்னு சுளுக்கு அல்லது கை, கால் வலி வந்தா பார்மசிக்கு ஓடாதீங்க. ஒரு பழைய காட்டன் சாக்ஸுக்குள் ஒரு கப் பச்சரிசியை கொட்டி, நுனியை முடிச்சு போடுங்கள். இதை மைக்ரோவேவ் ஓவனில் 30 செகண்ட் வைத்தால் 'ஹாட் பேக்' தயார்! (இதே சாக்ஸை ஃபிரிட்ஜில் வைத்தால் 'ஐஸ் பேக்' தயார்).
உங்களோட ஆபீஸ் ஷூ அல்லது ஸ்போர்ட்ஸ் ஷூ பயங்கரமா நாறுதா? பழைய சாக்ஸுக்குள் 2 ஸ்பூன் பேக்கிங் சோடா அல்லது கொஞ்சம் காபி தூளை கொட்டி இறுக்கமாக முடிச்சு போடுங்கள். இரவில் தூங்கும் போது இந்த சாக்ஸை ஷூவுக்குள் போட்டு வைத்தால், காலையில் துர்நாற்றம் காணாமல் போய் பிரஷ்ஷாக இருக்கும்.
55
வண்டியை பளபளக்க வைக்கலாம்:
பைக் அல்லது காரை வாஷ் பண்ணிட்டு பாலிஷ் போடும் போது, கையில் துணியை பிடிச்சு தேய்க்கிறது கஷ்டமா இருக்கும். பழைய சாக்ஸை கையில் கிளவுஸ் (Gloves) மாதிரி மாட்டிக்கிட்டு, பாலிஷ் லிக்யூடை தொட்டு வண்டியை தேய்ச்சு பாருங்க... மூலை முடுக்குல இருக்கிற அழுக்கெல்லாம் போயி வண்டி ஷோரூம் கண்டிஷனுக்கு மாறிடும்!
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.