பசும்பால் vs எருமைப்பால்; அளவற்ற ஊட்டச்சத்துக்களுக்கு எதை குடிக்கனும் தெரியுமா?

Published : Aug 30, 2025, 04:48 PM IST

பசும்பால் அல்லது எருமை பால் இந்த ரெண்டுல எது ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது என்று இங்கு பார்க்கலாம்.

PREV
14
Cow Milk or Buffalo Milk

பால் நமது அன்றாட உணவில் ஒரு பிரதான இடத்தை பிடித்துள்ளது. இது புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட்டுகள் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் நிறைந்த சிறந்த மூலமாகும். பாலை பொறுத்த வரை பசும்பால், ஆட்டுப்பால், எருமைப்பால் என பல வகைகள் இருந்தாலும், அவை ஒவ்வொன்றிலும் பல்வேறு ஊட்டச்சத்து மதிப்புகள் காணப்படுகின்றது. இருந்தபோதிலும் பசும்பால் மற்றும் எருமைப்பால் இவை இரண்டில் எது ஆரோக்கியத்திற்கு பெஸ்ட் என்ற கேள்வி பலருக்கும் எழுகிறது? ஏனெனில் இவை இரண்டில் ஊட்டச்சத்து மதிப்பு, சுவை மற்றும் ஆரோக்கிய நலன்கள் வெவ்வேறானவை. ஆனாலும் இந்த இரண்டும் ஊட்டச்சத்துக்களின் மூலம் என்பதில் எந்தவொரு சந்தேகமில்லை. இப்போது பசும் பால் அல்லது எருமைப்பால் இந்த எது சிறந்தது என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

24
பசும்பால்

பசும்பாலில் தேவையான அளவு புரதம் மற்றும் கொழுப்பு உள்ளன. மேலும் இது எளிதில் ஜீரணமாகக் கூடியது. ஆனால் வாயு பிரச்சனை, அமிலத்தன்மை மற்றும் செரிமான தொடர்பான பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த பால் ஏற்றதல்ல. பசும்பாலில் கால்சியம் மற்றும் வைட்டமின் ஏ நிறைந்துள்ளதால், அவை எலும்புகள் மற்றும் கண் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

34
எருமைப்பால்

எருமை பாலில் தேவைக்கு அதிகமான புரதம் மற்றும் கொழுப்பு உள்ளது. குறிப்பாக பசும் பாலை விட இந்த பாலில் தான் கொழுப்பு அதிகமாக இருக்கிறது. மேலும் நல்ல கெட்டியான தன்மையில் இருக்கும். இதனால் இந்த பால் ஜீரணிக்க சற்று நேரம் எடுக்கும். மேலும் எருமை பாலில் இருக்கும் புரதம் உடலுக்கு அதிக ஆற்றலை கொடுத்தாலும், கொழுப்பையும் உடலில் சேர்த்து விடும். கடினமாக உழைப்பவர்களுக்கு இந்த பால் சிறந்தது. ஆனாலும் வாயு தொல்லை, அமிலத்தன்மை, செரிமான பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த பால் உகந்ததல்ல.

44
எது பெஸ்ட்?

- எருமை பாலில் புரதம் அதிகமாக உள்ளதால் அது சிறுநீரகங்களுக்கு அதிக சுமை பாதிப்பை ஏற்படுத்தி விடும். ஆனால் பசும்பாலில் அப்படியல்ல. அதில் குறைவாக தான் புரதம் இருப்பதால் அது சிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்தாது ஆகவே சிறுநீரக பிரச்சனை உள்ளவர்களுக்கு பெருமை பாலை விட பசும்பால் தான் சிறந்தது.

- பசும்பால் ஆனது விரைவாக செரிமானம் ஆவதால் செரிமான பிரச்சனையை ஏற்படுத்தாது. ஆனால் சில சமயங்களில் வாயுத்தொல்லை, அமிலத்தன்மை ஏற்படுத்திவிடும் . ஆனால் அது அரிதானது தான். அதேசமயம் எருமைப்பால் செரிமானமாக தாமதமாகும். மேலும் குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு இது அதிக ஏப்பத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், சிலருக்கு வாயு தொல்லை, அமிலத்தன்மையையும் ஏற்படுத்திவிடும். ஆனால் செரிமான பிரச்சனை இல்லாதவர்களுக்கு இது சிறந்த தீர்வு.

எருமைப்பால் மற்றும் பசும்பாலின் நன்மைகளை இப்போது நீங்கள் அறிந்திருப்பீர்கள். இவை இரண்டில் எது உங்கள் ஆரோக்கியத்திற்கு பெஸ்ட் என்பதே நீங்களே முடிவு செய்யுங்கள் ஆனால் எருமை பாலை நீங்கள் காய்ச்சும் போது அதில் தண்ணீர் அதிகமாக சேர்த்துக் கொள்வது நல்லது.

Read more Photos on
click me!

Recommended Stories