சென்னைவாசிகளுக்கு ஜாக்பாட்... மெட்ரோ ரயில் கட்டணத்தில் மேலும் 20% தள்ளுபடி...!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் படி மெட்ரோ ரயில் கட்டண குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது

சென்னைவாசிகளின் பிரதான போக்குவரத்தாக மெட்ரோ ரயில் சேவை மாறி வருகிறது. போக்குவரத்து நெரிசல், குறைவான பயண நேரம் ஆகியன பெரும்பாலான மக்களை மெட்ரோ ரயில் சேவையை நோக்கி இழுத்தாலும், அதிக கட்டணம் என்பது மக்களின் நீண்ட நாள் குறையாக இருந்து வந்தது. அதிகபட்சமாக ரூ.70 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு செவி சாய்த்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைத்து அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணிப்பதற்கான அதிகபட்ச கட்டணம் ரூ.70-இல் இருந்து ரூ.50 -ஆக குறைக்கப்பட்டுள்ளது. 5 கி.மீட்டர் வரை மெட்ரோ ரயிலில் பயணிப்பதற்கான கட்டணம் ரூ.20 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுகிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில் கட்டணத்தில் இருந்து 50 சதவீத தள்ளுபடி அளிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்தது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் படி மெட்ரோ ரயில் கட்டண குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. மெட்ரோ ரயில் கட்டண டிக்கெட்டை பெற இதை மட்டும் செய்தால் 20 சதவீதம் வரை தள்ளுபடி கொடுப்பதாக மெட்ரோ நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஸ்மார்ட் கார்டு மூலம் டிக்கெட் பெறுபவர்களுக்கு 10 சதவீதமும், QR-CODE மூலம் டிக்கெட் பெறுவர்களுக்கு 20 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Latest Videos

click me!