
கர்ப்ப காலத்தில் பெண்கள் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சினை கால் வீக்கம். வயிற்றில் இருக்கும் குழந்தையின் எடை அதிகரிக்க அதிகரிக்க அதன் அழுத்தத்தால் கால் வீக்கம் ஏற்படுகிறது. இதனால் சில சமயங்களில் பெண்கள் நடக்க முடியாமல் போகிறது. எனவே அதன் சரி செய்வது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.
கர்ப்ப காலத்தில் கால் வீக்கம்:
கர்ப்ப காலத்தில் பெண்களின் உடலில் பலவிதமான மாற்றங்கள் நிகழ்வது வழக்கம். எனவே இந்த காலத்தில் அவர்களது உடலை ஆரோக்கியமாக வைப்பது மிகவும் அவசியம். அதுவும் குறிப்பாக கர்ப்ப காலத்தில் காலில் வீக்கம் பிரச்சனை அதிகமாகவே இருக்கும். கை, கால்களில் வீக்கம் லேசாக இருந்தால் அது பெரிய பிரச்சனை கிடையாது. அதுவே அதிகமாக இருந்தால் அது உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே கர்ப்ப காலத்தில் ஏற்படும் வீக்கத்தை தடுக்க கர்ப்பிணி பெண்கள் செய்ய வேண்டிய சில வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை என்ன என்பதை பற்றி இப்போது பார்க்கலாம்.
கர்ப்ப காலத்தில் ஏற்படும் கால் வீக்கத்தை குறைக்க செய்ய வேண்டியவை:
உப்பு அளவை குறைக்கவும்:
கர்ப்ப காலத்தில் காலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உணவில் அதிகமாக உப்பு சேர்ப்பதை குறைக்க வேண்டும். ஏனெனில் உப்பு உடலில் நீர் தேக்கத்தை அதிகரிக்கச் செய்யும். அதுபோல ம்ஊறுகாய், அதிக உப்பு உள்ள உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
இதையும் படிங்க: கர்ப்ப காலத்தில் இந்த 6 அறிகுறிகள் வந்தா அசால்டா இருக்காதீங்க.. பிரச்சனையாகிடும்!
பொட்டாசியம் நிறைந்த உணவுகள்:
கர்ப்ப காலத்தில் பெண்கள் பொட்டாசியம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது ரொம்பவே நல்லது. இவை உடலில் நீர் தேக்கம் ஏற்படாமல் இருக்க உதவும். இதற்கு வாழைப்பழம், கீரைகள், பீன்ஸ், உருளைக்கிழங்கு, சால்மன், பருப்பு மற்றும் பயிர் வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
அதிக நேரம் நிற்காதே!
கர்ப்ப காலத்தில் நீண்ட நேரம் நின்று கொண்டு இருக்க வேண்டாம். அதற்கு பதிலாக கால்களை தலையணை அல்லது நாற்காலி மேல் உயர்த்தி வைக்க வேண்டும். இப்படி செய்தால் காலில் வீக்கம் ஏற்படாது.
இதையும் படிங்க: கர்ப்பிணிகளே! சர்க்கரை நோய் இருந்தால் ஜாக்கிரதை...குழந்தைக்கு 'இந்த' ஆபத்தான பாதிப்புகள் வரும்!
தண்ணீர் குடிக்க வேண்டும்:
கர்ப்ப காலத்தில் ஏற்படும் கால் வீக்கத்தை சரி செய்ய போதிய அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். ஏனெனில் உடம்பில் போதிய அளவு நீர் சேர்த்து இல்லாவிட்டால், காலில் நீர் தேங்க ஆரம்பிக்கும். எனவே கர்ப்ப காலத்தில் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
காஃபின்:
கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் காஃபின் அதிகமாக எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் காஃபினில் டையூரிக் அதிகமாக இருப்பதால் நீர்ச்சத்தை மலத்தின் வழியாக வெளியேற்றி விடும். இதனால் காலில் உயிர் தங்கி வீக்கத்தை ஏற்படுத்தும். வேண்டுமானால் நீங்கள் புதினா டீ போன்ற ஹெர்பல் டீ அருந்தலாம். இது உங்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் குமட்டல், வாந்தியை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது.
பாதங்களுக்கு மசாஜ் செய்!
கர்ப்ப காலத்தில் கால் வீக்கமாக இருந்தால் கால்களுக்கும் மசாஜ் செய்யுங்கள். இதனால் ரத்த ஓட்டம் அதிகரித்து வீக்கம் குறைய ஆரம்பிக்கும். அதுபோல இரவு தூங்கச் செல்வதற்கு முன் கால்களில் வெந்நீர் வைத்து நன்கு ஒத்தடம் கொடுங்கள். இதனால் கால் வீக்கம் குறைவதோடு மட்டுமின்றி நல்ல தூக்கம் கிடைக்கும்.