இப்படிப்பட்ட காரணமும் உண்டு
உங்களை ஒருவர் விரும்பும் பட்சத்தில், அவர் உங்களுடைய உதட்டை விரும்பி பார்க்கக்கூடும். இது உங்கள் மீதான ரசனையின் பேரிலும் ஏற்படும். ஒருவேளை நீங்களே அந்த நபரை தவிர்த்தாலும், அவர் வலிய வந்து பேசுவார். இதை அந்த குறிப்பிட்ட நபரின் உடல்மொழியில் வாயிலாகவும் உணரலாம். உங்களை முத்தமிட வேண்டும் என்கிற ஆசையில், அவர் தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பார். மேலும் உங்களை தொட்டு தொட்டு பேசுவதும், விடாமல் பார்த்துக் கொண்டிருக்கும் செயல்பாடுகளையும் அவர் செய்யக்கூடும். ஒருவேளை அந்த நபர் உங்களுடைய காதலராக அல்லது கணவராக இருந்தால் எந்த பிரச்னையும் இல்லை. அப்படி யாருமில்லை என்றால், அந்த நபர் உங்களை டேட் செய்ய விரும்புகிறார் என்று பொருள்படும்.