
குளிர்காலத்தில் கேரட் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. இதில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஏராளமாக உள்ளன. அவை நம்முடைய ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். கேரட்டில் கூட்டு, பொரியல், ஸ்வீட் என பல வகையான ரெசிபிகள் செய்து சாப்பிடலாம்.
கேரட் ஆரோக்கியத்திற்கும் மட்டுமல்ல நம்முடைய சருமத்திற்கும் ரொம்பவே நல்லது தெரியுமா? குறிப்பாக சரும பராமரிப்பு கேரட்டை சேர்க்கலாம். இதில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் நிறைந்துள்ளன. அவை நம்முடைய சருமத்தை பளபளப்பாக வைக்க உதவுகிறது. எனவே பளபளப்பான சருமத்தை பெற கேரட் ஃபேஸ் பேக் வீட்டிலேயே எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
முல்தானி மிட்டி மற்றும் கேரட் பேஸ் ஃபேக்:
உங்கள் முகத்தில் பருக்கள் அதிகமாக இருந்தால் அதை போக்க கேரட் சாறு மற்றும் ரோஸ் வாட்டருடன் ஒரு ஸ்பூன் மில்தான் மிட்டியை நன்கு கலந்து அந்த பேஸ்ட்டே உங்களது முகத்தில் தடவி சுமார் 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும் .இதை நீங்கள் வாரத்திற்கு 1-2 முறை செய்து வந்தால், பருக்கள் குறைந்து முகம் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
தேன் மற்றும் கேரட் பேஸ் ஃபேக்:
உங்கள் முகம் வறண்டு இருந்தால் இந்த ஃபேஸ் பேக் உங்களுக்கு நிச்சயம் உதவும் .இதற்கு கேரட்டை தூவி அதில் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் காய்ச்சாத பச்சையப்பால் சேர்த்து, நன்கு கலந்து அதை முகத்தில் தடவி சுமார் 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதை வாரத்திற்கு 1-2 முறை செய்து வந்தால், முகம் வறட்சி நீங்கி, பளபளப்பாக இருக்கும்.
இதையும் படிங்க: கொரியன்ஸ் போல முகம் பளபளக்க தினமும் இரவு தூங்கும் முன் இந்த '5' விஷயங்களை செய்ங்க!
அரிசி மாவு மற்றும் கேரட் பேஸ் ஃபேக்:
இதை செய்ய முதலில் அரிசி மாவுடன் கேரட் துருவல் மற்றும் காய்ச்சாத பாலை சேர்த்து நன்கு கலந்து அந்த பேஸ்ட் முகத்தில் தடவிக் கொள்ளுங்கள். வேண்டுமானால் இதனுடன் சிறிதளவு மஞ்சள் சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். இந்த பேஸ் ஃபேக்கை உங்கள் முகத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கி முகத்தை பொலிவாக மாற்றும்.
இதையும் படிங்க: குளிர்காலத்தில் தினமும் முகம் ஜொலி ஜொலிக்க இந்த '6' ஃபாலோ பண்ணுங்க!
தயிர் மற்றும் கேரட் ஃபேஸ் பேக்:
இந்த இந்த ஃபேஸ் பேக்கிற்கு2 ஸ்பூன் தயிரில் சிறிதளவு கேரட் ஜூஸை கலந்து கொள்ளுங்கள் பிறகு இதனுடன் முட்டையின் வெள்ளை குறை வீசியது நன்கு கலந்து அதை உங்களது முகத்தில் தடவி சுமார் 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். வாரம் ஒரு முறை இந்த ஃபேஸ் பேக் போட்டல் முகம் ஜொலிக்கும்.