
அசைவ உணவுகளை சமைக்கும்போது ஈரல் வாங்கி வந்து சமைப்பது இன்றும் கிராமப்புறங்களில் வழக்கம். சிக்கன் ஈரலில் உப்பு தடவி அதை சுட்டு உண்பது எனக்கும் கூட பால்ய காலத்தில் இருந்தே விருப்பம். எங்கள் வீட்டில் இன்றும் சிக்கல் ஈரலை சாப்பிட போட்டி நடக்கும். இன்றைய காலகட்டத்தில் சிக்கன், மட்டன் இரண்டின் ஈரலும் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதில் பல்வேறு தாதுக்களும், ஊட்டச்சத்துக்களும் உள்ளன. ஆனால் இதில் எது அதிகளவில் நன்மைகள் கொண்டுள்ளது என மக்களுக்கு தெரிவதில்லை. அதை இங்கு காணலாம்.
சிக்கன் ஈரல் நன்மைகள்:
சிக்கன் ஈரலில் உடலுக்கு தேவையான இரும்புச்சத்து காணப்படுகிறது. நம் உடலில் இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்க ஈரல் உண்ணலாம். இது ரத்தசோகை வராமல் தடுக்க உதவுகிறது. இரும்புச்சத்தை தவிர, வைட்டமின் ஏ, பி12, ஃபோலேட் ஆகிய சத்துக்களும் இதில் காணப்படுகின்றது. ஈரல் உண்பது உங்களுடைய கண் பார்வையை கூர்மையாக்க உதவுகிறது. உங்களுடைய தசைகளை சரி செய்யக்கூடிய புரதச்சத்து ஈரலில் காணப்படுகிறது. ஈரல் உண்ணும்போது ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கிடைக்கின்றன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். இதன் மூலம் எளிதில் தொற்றுநோய் தாக்காமல் தப்பலாம். தோல் பராமரிப்புக்கு உதவும் ஊட்டச்சத்துக்கள் கூட இருக்கின்றன.
மட்டன் ஈரல் நன்மைகள்:
இதில் வைட்டமின் பி12 உள்ளது. இதை அடிக்கடி உண்பதால் மூளையின் செயல்திறன் மேம்படும். உங்களுடைய அறிவாற்றலை மேம்படுத்த மட்டன் ஈரலை உண்ணலாம். நரம்பு மண்டலம், எலும்புகள், பற்களை பேண தேவையான தாதுக்கள் மட்டன் ஈரலில் உள்ளன. சிக்கன் ஈரலை போலவே மட்டன் ஈரலில் இரும்புச்சத்து இருப்பதால் இரத்த சோகை நோயாளிகள் உண்ணலாம். உடற்பயிற்சி செய்யும்போது தசைகள் சேதமாகும். அதை சரிசெய்யும் ஆற்றல் மட்டன் ஈரலில் உள்ள புரதச்சத்திற்கு உள்ளது. மட்டன் ஈரலிலும் வைட்டமின் ஏ, ஃபோலேட் உள்ளிட்ட உயிர்ச்சத்துக்கள் உள்ளன.
எது சிறந்தது?
சிக்கன் ஈரலை காட்டிலும் மட்டன் ஈரல் மிகவும் சிறந்தது என ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்கின்றனர். அதில் தான் அதிகமான சத்துக்கள் உள்ளனவாம். நாம் இரண்டையுமே அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஈரலில் கொழுப்பு அதிகம் உள்ளதால் அளவாகவே உண்ண வேண்டும்.
இதையும் படிங்க: ஆரோக்கியத்திற்கு வலு சேர்க்கும் ஆட்டு ஈரல் வறுவல் செய்யலாம் வாங்க!
யார் உண்ணக்கூடாது?
அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனை, சிறுநீரகம் கோளாறு, தசை சம்பந்தமான நோய்கள் இருப்பவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார் ஆகியோர கண்டிப்பாக மட்டன் ஈரலை மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். சிக்கன் ஈரலை வாரத்தில் ஒரு தடவை அல்லது இரண்டு தடவை மட்டுமே உண்பது நல்லது. ஆனால் தினமும் சாப்பிடவேண்டும்.
இதையும் படிங்க: கோழிகளின் ஈரல் - மனிதன் சாப்பிடுவதற்கு உகந்ததா?