மழைக்காலத்தில் தயிர் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்று உங்களுக்குப் பயம் இருந்தால், தயிரில் ஒரு சிட்டிகை மிளகுத் தூள் அல்லது வறுத்த சீரகத் தூள் மற்றும் கொஞ்சம் உப்பு சேர்த்து சாப்பிடுங்கள். இது தயிரின் குளிர்ச்சியைக் கட்டுப்படுத்தி, செரிமானத்தையும் எளிதாக்கும்.
இவர்கள் மட்டும் கவனமாக இருப்பது நல்லது
சைனஸ், ஆஸ்துமா, அலர்ஜி அல்லது டான்சில் பிரச்சனை இருக்கிறவர்கள் மழைக்காலத்தில் ரொம்ப சில்லென்று இருக்கும் தயிர் மற்றும் ஐஸ்கிரீம் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இது அவர்களுக்கு தொண்டை தொற்றை அதிகரிக்கலாம்.
தயிரை விட மோர் ரொம்ப நல்லது
மழைக்காலத்தில் தயிருக்குப் பதிலாக, அதில் தண்ணீர், இஞ்சி, கொத்தமல்லி மற்றும் பெருங்காயம் சேர்த்து நீர்த்த மோராகக் குடிப்பது செரிமான மண்டலத்துக்கு ரொம்பவே நல்லது.
ஐஸ்கிரீம் சாப்பிடுபவர்கள் இதைப் பண்ணுங்க..
மழைக்காலத்தில் ஐஸ்கிரீம் சாப்பிடலாம், ஆனால் அதிகமாகச் சாப்பிடக் கூடாது. ஐஸ்கிரீமில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதால், இது தற்காலிகமாக நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைக்கும். அதுமட்டுமில்லாமல் மழைக்காலத்தில் தொண்டை ரொம்ப சென்சிட்டிவாக இருக்கும். அதனால் ஐஸ்கிரீம் சாப்பிட்டவுடன் கொஞ்சம் வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பது நல்லது.