
மனிதன் உயிர் வாழ்வதற்கு தண்ணீர் மிகவும் அவசியம். எப்படியெனில், மனிதனால் உணவில்லாமல் உயிர் வாழ முடியுமே தவிர, தண்ணீர் இல்லாமல் வாழ முடியாது. தண்ணீர் உடலை நீரேற்றமாக வைத்திருப்பது மட்டுமின்றி சருமத்தை ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது. இதனால்தான் எப்போதும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று நிபுணர்கள் சொல்லுகிறார்கள்.
ஆனால், அதிகப்படியான தண்ணீர் உடல் எடையை அதிகரிக்குமாம் தெரியுமா? ஆம், நிபுணர்களின் கூற்றுப்படி ஒரு நபரின் உடலில் 50 முதல் 60 சதவிகிதம் தண்ணீராலானது. இத்தகைய சூழ்நிலையில் அதிகப்படியான தண்ணீர் குடித்தால் எடை அதிகரிப்பது வாய்ப்பு அதிகம் உள்ளது. மேலும், அதிகப்படியான தண்ணீர் குடிப்பதால் மட்டுமல்ல மோசமான வாழ்க்கை முறையாலும் உடல் எடை அதிகரிப்பு பிரச்சனை ஏற்படும்.
நீரால் எடை அதிகரிப்பதற்கான காரணங்கள்:
1. அதிக உப்பு மற்றும் கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை சாப்பிடுவதால், பொட்டாசியம் மெக்னீசியம் குறைபாடு ஏற்பட்டு உடலில் நீர் தேக்கம் ஏற்படும். இதனால் எடை அதிகரிக்கும்.
2. நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பதாலும் அல்லது நிற்பதாலும், திரவ சுழற்சி சரியாக நடக்கவில்லை என்றாலும் வீக்கம் மற்றும் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.
3. இதயம் அல்லது சிறுநீரக பிரச்சனை காரணமாக உடலில் தண்ணீர் குவிந்து வீக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் எடையை அதிகரிக்கச் செய்யும்.
4. அலர்ஜி எதிர்ப்பு அல்லது கருத்தடை மாத்திரை போன்ற சில மருந்துகளின் பக்க விளைவுகளால் உடலில் நீர் தேக்கம் ஏற்பட்டு எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.
இதையும் படிங்க: நின்றபடி தண்ணீர் குடிக்குறீங்களா? அப்ப கண்டிப்பா இந்த 'பிரச்சனை' வரலாம் தெரியுமா?
நீரால் ஏற்பட்ட எடையை குறைப்பது எப்படி?
உப்பு குறைத்துக் கொள்:
உங்களது உடலில் நீர் தேங்கி இருந்தால் அதனால் ஏற்பட்ட எடையை குறைக்க விரும்பினால், அதிக சோடியம் உள்ள உணவுக்கு பதிலாக குறைந்த சோடியம் உள்ள உணவுகளை மட்டுமே சாப்பிடுங்கள். அதாவது நீங்கள் அதிக உப்பு எடுத்துக் கொள்வதற்கு பதிலாக குறைந்த உப்பு எடுத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் உப்பு அதிக அளவு எடுத்துக் கொள்ளும் போது அதனால் உடலில் சோடியம் மற்றும் தண்ணீரின் விகிதம் பாதிக்கப்படுகிறது. இதனால் உடலில் தண்ணீர் தேங்கி எடை அதிகரிப்பதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.
போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள்:
உடலில் நீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க தண்ணீர் குடிக்க வேண்டும். எனவே போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். அதுமட்டுமின்றி போதுமான அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் சிறுநீரகம் வழியாக சோடியம் மற்றும் அதிகப்படியான நீர் வெளியேற்றப்படுகிறது.
இதையும் படிங்க: இதய நோயாளிகள் தினமும் எத்தனை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்? மீறினால் என்ன நடக்கும்?
கார்போஹைட்ரேட்டை குறைக்கவும்:
உடலில் கார்போஹைட்ரேட்டின் அளவு அதிகரித்தால் உடலில் அதிகப்படியான தண்ணீர் தங்கும். இது எடை அதிகரிப்பதற்கு வழி வகுக்கும். எனவே நீங்கள் கார்போஹைட்ரேட்டுகளை குறைந்த அளவில் எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு பதிலாக புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள். இந்த பிரச்சனை வராது.
உடற்பயிற்சி:
நாம் உடற்பயிற்சி செய்யும்போது உடலில் தேங்கியிருக்கும் நீரானது வியர்வை வழியாக வெளியேறும். இதன் மூலம் நீரால் ஏற்பட்ட எடையை சுலபமாக குறைக்க முடியும். இருந்தபோதிலும் உடற்பயிற்சி செய்யும் போது உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்ளுங்கள்.