கருஞ்சீரகம் இப்படி சாப்பிட்டு பாருங்க.. இறப்பை தவிர எல்லா நோய்களுக்கும் தீர்வு.. அட யாரு சொன்ன தெரியுமா?

First Published | Feb 28, 2023, 7:32 PM IST

கருஞ்சீரகத்தில் காணப்படும் பல மருத்துவ நன்மைகளை தெரிந்து கொள்ளலாம். 

கருஞ்சீரகம் எனும் மூலிகைத் தாவரம் பல நோய்களை தீர்க்கும் வல்லமை கொண்டது. ஒரு மனிதனின் மரணத்தை தவிர பிற நோய்கள் அனைத்தையும் குணப்படுத்தக்கூடியது என நபிகள் கூட கருஞ்சீரகத்தை புகழ்ந்து சொல்லியுள்ளார். மருத்துவக் குணங்கள் பல கொண்ட கருஞ்சீரக விதையில் தைமோகுயினன் (Thymoquinone) எனும் அபூர்வ வேதிப்பொருள் உள்ளது. இந்த வேதிப்பொருள் நோய் எதிர்ப்பு சக்தியை அள்ளி தரும். இதனால் கெட்ட கொழுப்பு குறையும். அதுமட்டுமில்லை, அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்து ஆகிய பல சத்துக்களை கருஞ்சீரம் கொண்டுள்ளது. 

கருஞ்சீரகத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடென்ட் வீக்கம் குறைக்க உதவுகிறது. ஆஸ்துமா, சுவாசப் பிரச்னைகளை நம் கிட்ட கூட நெருங்கவிடாது. இதயநோய், புற்றுநோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தது. கணைய புற்றுநோய்க்கு நல்ல மருந்தாக உள்ளது. இதனை எப்படி எல்லாம் பயன்படுத்தினால் நன்மை கிடைக்கும் என்பதை இங்கு காணலாம். 

Tap to resize

மூக்கடைப்புக்கு வந்தால் கருஞ்சீரகம் வைத்து சட்டென போக்கலாம். ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகப் பொடியுடன் 50 மி.லி தேங்காய் எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள். இந்த கலவையை வெப்பப்படுத்தி அதில் இரண்டு துளி மூக்கில் நுகர்ந்தால் மூக்கடைப்பு பட்டென சரியாகும். 

ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகத் தூளை சூடான நீர், தேன் போன்றவை மிக்ஸ் செய்து அருந்தினால் சிறுநீரகக் கற்கள், பித்தப்பைக் கற்கள் கூட மெல்ல கரையும் அற்புதத்தை காண்பீர்கள். இந்த அற்புத பானத்தை காலை, மாலை ஆகிய இருவேளைகளிலும் பருகுவது அவசியமாக கூறப்படுகிறது. இருமலால் அவதிபடுபவர்கள் ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகத் தூளை, அரை தேக்கரண்டி அரைத்த பூண்டு தேன் கலந்து உண்ணலாம். இதனால் நுரையீரலில் ஒட்டியிருக்கும் சளி அடியோடு நீங்கும். 

Image: Getty Images

மாதவிடாய் பிரச்சனையின்போது பெண்ணின் அடிவயிறு வெயிட்டாக இருக்கும். சில பெண்கள் சிறுநீர் கூட கழிக்க முடியாமல் அவதிப்படுவார்கள். அவர்கள் வறுத்து தூளாக்கிய கருஞ்சீரகத்தை கருப்பட்டியுடன் சேர்த்து உண்ணலாம். கருப்பட்டி இல்லையெனில் தேன் சேர்த்து உண்ணலாம். இந்த மருந்தை மாதவிடாய் தேதி நெருங்கும் 10 தினங்களுக்கு முன்பே சாப்பிடலாம். இதனால் பெண்களின் வயிற்று வலி, அதிகமான ரத்தப்போக்கு, சிறுநீர் வெளியேறும் போது வரும் பிரச்சனை எல்லாமே குணமாகும். 

இதையும் படிங்க: ஜீரணம் ஆகாம வயிற்றில் கேஸ், எரிச்சல்.. சாப்பிடும் போதே என்ன பண்ணனும் தெரியுமா?

பிரசவம் முடிந்த பின் கர்ப்பப்பையில் சேரும் கழிவுகளை போக்க கருஞ்சீரகத் தூள் உதவும். இந்த தூளுடன் பனைவெல்லம் கலந்து உண்ணலாம். குழந்தை பெற்ற பெண்கள் மூன்றாவது நாள் தொடங்கி காலை, மாலை ஆகிய இருவேளைகள் என தொடர்ச்சியாக 5 தினங்கள் இதை உண்ணலாம். இதை போலவே இன்னொரு மருந்தும் உள்ளது. அதில் வெந்தயம் ஒரு கால் கிலோ, ஓமம் ஒரு 100 கிராம் அளவு, கருஞ்சீரகம் ஒரு 50 கிராம் என அனைத்தையும் நன்கு வறுத்து தூளாக்கிவிட வேண்டும். இந்த தூளை இரவில் ஒரு ஸ்பூன் எடுத்து சூடுநீரில் கலந்து அருந்த வேண்டும். இதை குடித்த பிறகு மற்ற உணவுகளை சாப்பிடக் கூடாது. இதை தொடர்ச்சியாக செய்தால் உடலில் உள்ள நச்சுக்கள் சுத்தமாக வெளியேறிவிடும். 

இதையும் படிங்க: வாஸ்துபடி உங்க வீட்டு வாசல் எப்படி இருக்க வேண்டும்.. எத்தனை வாசல் இருந்தால் ஆரோக்கியமும், செல்வமும் நிலைக்கும்

Latest Videos

click me!