அறிவியல் தினமே கொண்டாடும் அளவிற்கு ராமன் விளைவில் அப்படி என்ன சிறப்பு உள்ளது என்கிறீர்களா? நிச்சயம் சிறப்பு வாய்ந்தது. தான் ராமன் விளைவு இன்றளவும் அறிவியல் தொழில்நுட்பத்தில் பயன்பட்டு வருகிறது. எந்த ஒரு பெரிய கண்டுபிடிப்பிலும் சிறிய அளவிலான விதிகள் தான் உத்தியாக கையாளப்படும். ராமன் விளைவு உத்திகளை தான் புற்றுநோய் கண்டறிதல், தோலின் வழியாக மருந்தை செலுத்துதல், எலும்புத்தன்மைப் பகுப்பாய்வு, ரத்தகுழாயில் கொலஸ்ட்ரால் படிவதை கண்டறிதல் உள்ளிட்ட பல நோய் கண்டறிதல் விஷயங்களில் பயன்படுத்துகின்றனர். சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சர்க்கரை நோய் கண்டறியும் ஒரு சாதனத்தில் கூட ராமன் விளைவுதான் அடிநாதம்.