கோடைக்காலம் வந்துவிட்டாலே, “செடிகளுக்கும் தாகம் இருக்கும்” என்று நினைத்து அதிகமாக தண்ணீர் ஊற்றுவது பலரின் வழக்கம். ஆனால் இதுவே செடிகளுக்கு பெரிய பாதிப்பை உண்டாக்கும். சில நாட்களில் இலைகள் மஞ்சளாகி உதிர்வதும், செடி சோர்ந்து போவதும் அதிக தண்ணீரின் விளைவாகத்தான் நடக்கும். எனவே, வெயிலில் செடியை காப்பாற்ற தண்ணீர் அவசியம் என்றாலும், அதை சரியான அளவிலும் நேரத்திலும் கொடுக்க வேண்டும்.
செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதற்கான சிறந்த நேரம் அதிகாலை. காலை 6 முதல் 8 மணி வரை ஊற்றினால், மண் மெதுவாக ஈரத்தை உறிஞ்சிக் கொள்ளும். இதனால் செடி நாள் முழுவதும் சீராக இருக்கும். காலை நேரம் சாத்தியமாகவில்லை என்றால், மாலை சூரியன் மறைந்த பின் தண்ணீர் ஊற்றலாம். ஆனால் இலைகள் ஈரமாக இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும், இல்லை என்றால் பூஞ்சை நோய் தாக்கும் அபாயம் உள்ளது.