நாளுக்கு நாள் விலைவாசி உயர்வு அதிகரித்து வரும் நிலையில், அனைவரும் சேமிப்பின் அவசியத்தை உணர்ந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. குழந்தைகளுக்காக பெற்றோரும், குடும்ப தலைவிகள் தங்களுக்கென ஒரு சிறு பகுதியை இன்று சேமித்து வைத்தால் எதிர்கால வாழ்க்கை வளமடையும். பெண்களுக்கென அரசு மற்றும் வங்கிகள் தரும் சிறப்பான சிறு சேமிப்பு திட்டங்களை இதில் காணலாம்.
மகிளா சேமிப்பு திட்டம்
பெண்களுக்கான பிரத்தியேக சிறுசேமிப்பு திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. 'மகிளா சம்மன் சேமிப்பு பத்திரம்' என்று பெரியடப்பட்டுள்ள இத்திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை இதில் சேமிக்கலாம். சேமிப்பு பணத்திற்கு 7.5% நிலையான வட்டி வழங்கப்படும். மேலும், இதில் சேமிப்பு பணத்தில் பகுதியளவு தேவைக்கு எடுக்கும் சலுகையும் உண்டு
செல்வ மகள் சேமிப்பு திட்டம்
பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்காகவே மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் தான் செல்வமகள் சேமிப்பு திட்டம். இதில், மாதம் குறைந்த பட்சம் ரூ.50 செலுத்தியும் கணக்கை தொடங்கலாம். பெண் குழந்தைகள் பிறந்த நாளில் இருந்து 9 வயதுக்குள் கணக்கை தொடங்கிவிட வேண்டும்.
கணக்கு தொடங்கப்படும் நாளில் இருந்து 15 ஆண்டுகள் பணம் செலுத்த வேண்டும். இந்த திட்டத்தில், குழந்தைக்கு 18 வயது பூர்த்தி ஆகும் போது நீங்கள் செலுத்திய பணத்தின் வட்டியுடன் பாதித்தொகையை கல்வி மேற்படிப்பு அல்லது குறிப்பிட்ட காரணங்களுக்காக நீங்கள் பெற்று கொள்ளலாம். மீதித்தொகை அல்லது முழுத் தொகை பெண் குழந்தைக்கு 21 வயது பூர்த்தி அடையும் போது பெற்று கொள்ளும் வசதியும் உண்டு.
தொடர் வைப்பு கணக்கு (RD)
தபால் அலுவலகத்திலும், அனைத்து வங்கிகளிலும் அந்த தொடர் வைப்பு கணக்கு சேமிப்பு திட்டம் வழங்கப்படுகிறது. 6 மாதம் முதல் 5 ஆண்டுகள் வரை இதன் மூலம் சேமிக்க முடியும். குறைந்த பட்சம் மாதம் 500ரூ முதல் சேமித்து வரலாம்.
குடும்ப தலைவிகளுக்கும், வேலை பார்க்கும் இளம் பெண்களுக்கும் ஏற்ற திட்டம் இதுதான். தொடர் வைப்பு கணக்கு தொடங்கும் போதே முடிவு காலத்தை 6 மாதம் முதல் 5 ஆண்டுகள் என குறித்து கொள்ள வேண்டும். குறிப்பிட்ட தொகையை மாதாமாதம் செலித்தி வரை உங்கள் கால வரையை முடிவில், நீங்கள் செலுத்திய தொகையுடன் வட்டியும் சேர்த்து வழங்கப்படும்.
மறந்தும் தானமாக இந்த 1 பொருளை கொடுக்காதீங்க!! மீறினால் துரதிர்ஷ்டமும் தரித்திரமும் உங்களை ஆட்டிப் படைக்கும்!!
தங்க நகைகள் சேமிப்பு (Gold scheme)
தங்க நகைகளை விரும்பாத பெண்களே இல்லை எனக் கூறலாம். மேலும், தங்கத்தில் செய்யும் முதலீடு எப்போதுமே வீண் போகாது. இளம் பெண்கள், இல்லத்தரசிகள் சிறு தொகையை நம்பிக்கையான நகைக்கடைகளில் செலுத்தி குறிப்பிட்ட மாத முடிவில் செய்கூலி, சேதாரமின்றி நகைகளை பெற்றுக்கொள்ளலாம். தேவையான நேரத்தில் தங்க நகைகளை வங்கிகளில் அடகாக வைத்து தேவையான பண உதவியையும் பெறலாம்.