Brain Diet: குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் சூப்பர் 7 உணவுகள்..பெற்றோர்களே! கொடுக்க மிஸ் பண்ணீடாதீங்க..

First Published Aug 16, 2022, 3:17 PM IST

Brain Diet: குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் சூப்பர் உணவுகள் குறித்து இங்கே தெரிந்து வைத்து கொள்ளலாம்.

Brain Diet:

குழந்தைகள் நினைவாற்றல் அதிகரிக்க தாங்கள் அன்றாடம் சாப்பிடும் உணவில் கவனம் செலுத்துவது அவசியம். உடலில் இருக்கும் அனைத்து உறுப்புகளும்  இயங்குவதற்கு  மூளை, அடிப்படையாக விளங்குகிறது. பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உண்பது, வாழ்க்கைமுறை நோய்களைத் தடுக்கவும்,  நினைவாற்றல் செறிவு மற்றும் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும்.எனவே மூளை ஆரோக்கியமாக செயல்பட, சில முக்கிய ஊட்டச்சத்துக்கள் அவசியம். எனவே, குழந்தைகளின் மூளை வளர்ச்சி மற்றும் திறனை மேம்படுத்த உதவும் சத்தான உணவுகள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். 

Brain Diet:

உங்கள் உணவில் போதுமான வைட்டமின்கள் கிடைக்க வேண்டியது அவசியம். இல்லையென்றால், அது  ரத்தசோகை நாவின் மஞ்சள் அல்லது சிவப்பு நிறம், வாய் புண்கள், எரிச்சல், மனச்சோர்வு மற்றும் கடுமையான சோர்வு போன்றவற்றுக்கு வழிவகுக்கும்.  

Brain Diet:

மீன்:

மீன் இயற்கையாகவே ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் புரதத்தில் நிறைந்துள்ளது. இது குழந்தைகளின் இதயம், எலும்புகள், மூளை மற்றும் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்திக்கு சிறந்தது. மீன்கள் உண்ணும் குழந்தைகள் மிகுந்த புத்திக் கூர்மையுடன் இருக்கும்.கர்ப்பிணிகளுக்கு அது சிசுக்கள் வயிற்றில் இருக்கும்போது மூளை தொடர்பான நோய்கள் தாக்குவதும் குறைவாக இருக்கும்.

மேலும் படிக்க...Health Tips: இஞ்சி சாப்பிடுவதால் உடலில் இவ்வளவு நன்மைகள் உண்டா..? அடடே..! இவ்வளவு நாள் தெரியாம போச்சே..?

Brain Diet:

முட்டை:

முட்டை யில் வைட்டமின் B6, B12 மற்றும் D ஆகியவற்றை கொண்டது. அவை நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கவும், பார்வையை பராமரிக்கவும், வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தவும் உதவுகிறது. எனவே முட்டை சாப்பிடுவது குழந்தைகளின் நினைவாற்றலை மேம்படுத்துகிறது. 

egg

பால் மற்றும் தயிர்:

பால் மற்றும் தயிரில்,  அதிகமாக புரோட்டீன்,  வைட்டமின் பி 12, கால்சியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் டி உள்ளது. பல்வேறு  ஊட்டத்தை அளிக்கிற பாலானது வைட்டமின் பி12 அளவை மேம்படுத்தவும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.  மேலும் நரம்புத்தசை மண்டலத்தை நன்கு  இயக்குவதோடு மற்றும் மூளை செல்களை நன்கு செயல்பட வைக்கிறது.

Brain Diet:

நார்சத்து கொண்ட உணவுகள்:

பூசணி விதை, சியா விதைகள், எள் விதைகள், பாப்பி விதைகள், சூரியகாந்தி விதைகள் மற்றும் ஆளிவிதைகள் போன்ற அனைத்து விதைகளிலும் நார்ச்சத்துகள் அதிக அளவில் நிறைந்துள்ளது. இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் குழந்தைகளின் அறிவாற்றலையும் மேம்படுத்த உதவுகிறது. 
 

Brain Diet:

நட்ஸ்:

நட்ஸ், விதைகள் மற்றும் உலர் பழங்களில் ஆரோக்கியமான கொழுப்புகள், பல தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன.இதில் உள்ள ஒமேகா-3, கொழுப்பு அமிலங்கள் நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது. அதேபோல், நிலக்கடலை, பாதாம், பிஸ்தா மற்றும் முந்திரி போன்ற அனைத்து பருப்புகளிலும் மூளைக்கு உடனடி மற்றும் நீடித்த ஆற்றலை வழங்க உதவும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. 

மேலும் படிக்க...Health Tips: இஞ்சி சாப்பிடுவதால் உடலில் இவ்வளவு நன்மைகள் உண்டா..? அடடே..! இவ்வளவு நாள் தெரியாம போச்சே..?
 


காய்கறிகள் மற்றும் கீரைகள்:

பொதுவாக கீரைகள், காய்கறிகள் போன்றவற்றில் வைட்டமின் ஏ, பி, ஈ, கே மற்றும் சி மற்றும் பீட்டா கரோட்டின் மற்றும் ஃபோலேட் ஆகியவை உள்ளது. இது ஆரோக்கியமான வளர்ச்சியை வழங்க அனைத்து ஊட்டச்சத்துக்களையும் சரியாக உறிஞ்சுவதற்கு உதவுகிறது. குறிப்பாக, பசலைக் கீரை, லெட்யூஸ், ப்ராக்கோலி, கீரைகளில் உள்ள ஃபோலேட் உள்ளடக்கம் வளரும் குழந்தைகளின் மூளையில் நல்ல விளைவுகளை ஏற்படுத்துவதாக அறியப்படுகிறது.
 


நண்டுகள்:

 நண்டுகளில் வைட்டமின் பி12, ஒமேகா 3  கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் உள்ளது, இவற்றை உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்வது கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தவும், இதய நலனுக்கும் ஏற்றவை. மேலும் நண்டில், கொழுப்பும் குறைவாகவே இருக்கிறது.

மேலும் படிக்க...Health Tips: இஞ்சி சாப்பிடுவதால் உடலில் இவ்வளவு நன்மைகள் உண்டா..? அடடே..! இவ்வளவு நாள் தெரியாம போச்சே..?
 

click me!