வெறும் 10 நிமிடத்தில் பாத்ரூமை பளபளப்பாக மாற்றலாம்.. இதை செய்தால் போதும்.. சூப்பர் டிப்ஸ் இதோ..

First Published | Jul 10, 2024, 5:16 PM IST

பாத்ரூமை சுத்தமாக வைக்கவில்லை எனில் பல்வேறு நோய்கள் பரவும். எனவே சில நிமிடங்களிலேயே பாத்ரூமை சுத்தம் செய்ய உதவும் சில டிப்ஸ் குறித்து பார்க்கலாம். 

Bathroom

நம் வீட்டின் மற்ற இடங்களை போலவே பாத்ரூமை சுத்தமாக வைத்திருப்பதும் மிகவும் முக்கியம். எனினும் பாத்ரூமை சுத்தமாக வைப்பது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. பாத்ரூமை சுத்தமாக வைக்கவில்லை எனில் பல்வேறு நோய்கள் பரவும். எனவே சில நிமிடங்களிலேயே பாத்ரூமை சுத்தம் செய்ய உதவும் சில டிப்ஸ் குறித்து பார்க்கலாம். 

bathroom odours

பாத்ரூமை டைல்ஸை சுத்தம் செய்ய வினிகரை பயன்படுத்துங்கள். வினிகரை பாத்ரூம் டைல்ஸில் ஊற்றி சிறிது நேரம் ஊறவைத்து விட்டு பின்னர் பிரஷ்-ஐ வைத்து சுத்தம் செய்தால், கரைகள் அனைத்தும் எளிதில் நீங்கிவிடும்.

Tap to resize

bathroom

எலுமிச்சை தோல் :

எலுமிச்சை தோலை பயன்படுத்தி விட்டு உடனே தூக்கி எறியாமால், அதனை தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும். பின்னர் இந்த தண்ணீர் சோப்பு திரவத்தை சேர்த்து கலக்கவும். பின்னர் அந்த தண்ணீரை பாத்ரூம் மூலைகளில் நன்றாக தேய்த்தால் கறைகள் நீங்கி பாத்ரூம் பளபளப்பாக மாறும். 

bathroom mirror

பேக்கிங் சோடா :

முந்தைய நாள் இரவே பாத்ரூமில் பேக்கிங் சோடாவை போட்டு பரப்பவும். மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரை கொஞ்சமாக ஊற்றி நன்றாக ஸ்க்ரப் செய்தால் பிடிவாதமான கரைகள் கூட நீங்கும். பாத்ரூம் சுத்தமாக மாறும். 

washroom

கல் உப்பு, வினிகர், துணி துவைக்க பயன்படுத்தும் பவுடர், பேக்கிங் சோடா எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்ந்து கலந்து பின்னர் அதில் தண்ணீர் ஊற்றி கலக்க வேண்டும். பின்னர் இந்த கரைசலை பாத்ரூம் டைல்ஸில் போட்டு ஊறவைத்து 10 நிமிடம் கழித்து பிரஷ்-ஐ வைத்து தேய்த்தால் போதும். கறை படிந்த பாத்ரூம் பளபளப்பாக மாறும்.

Latest Videos

click me!