Morris Banana
மனிதன் ஒரு உணவை உண்ணும் பொழுது அதனால் எவ்வளவு மருத்துவ குணங்கள் கிடைக்கின்றதோ, அதே அளவிற்கு சில தேவையற்ற உணவுகளை உண்ணும் பொழுது மனிதர்களுடைய உயிருக்கே அது ஆபத்தாக சென்று முடிகிறது. மாறிவிட்ட வாழ்க்கை முறையில், துரித உணவுகள் நிறைந்திருக்கும் நிலையில் பல உணவுகள் மனிதனின் வாழ்க்கையே நிர்மூலமாக்குகிறது என்றால் அது மிகையல்ல.
அந்த வகையில் பெங்களூரு வாழைப்பழம் என்று அழைக்கப்படும் மோரிஸ் வாழைப்பழம், பார்ப்பதற்கு பளபளவென மஞ்சள் நிறத்தில் இருக்கும். ஆனால் இவை "திசு வளர்ப்பு" என்கின்ற முறையில் செயற்கையாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஒரு வாழைப்பழம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். முழுக்க முழுக்க வியாபாரி ரீதியாக மட்டுமே இந்த வாழைப்பழங்கள் விற்கப்படுகிறது. இந்த வாழைப்பழங்களை தொடர்ச்சியாக உண்டு வந்தால் மலட்டுத்தன்மை, தோல் அரிப்பு, சைனஸ், நாஸ்துமா போன்ற பாதிப்புகள் வரக்கூடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
சத்தான ஈவினிங் ஸ்நாக்ஸ் முருங்கைக்கீரை வடை... ரெசிபி இதோ..!
Artificial drinks
கடந்த சில ஆண்டுகளாகவே கடுமையான வெயில் நம்மை வாட்டி வதைத்து வருகின்றது. அதுபோன்ற நேரங்களில், பலரும் விரும்புவது பழச்சாறுகளை தான். ஆனால் இயற்கையாக பழங்கள் மூலம் கிடைக்கும் பழச்சாறுகளை, சர்க்கரை சேர்க்காமல் அருந்துவது நமக்கு மிகவும் நல்லது என்றாலும், மாறிவரும் கால சூழ்நிலையில் பலரும் சர்க்கரை கலந்த செயற்கை குளிர்பானங்களை அதிகம் வாங்கி பருக தொடங்குகின்றனர். இதில் ஊட்டச்சத்து எதுவும் கிடையாது, வெறும் நிறமிகளும், பிறவகை கெமிக்கல் மட்டும் தான் இருக்கிறது. இது உடலில் உள்ள கால்சியத்தை குறைய செய்வதோடு, அலசெய்மர் போன்ற மறதி சம்பந்தமான நோய்களையும், உயிர் ரத்த அழுத்தத்தையும் ஏற்படுத்த சக்தி உடையது.
Processed Food
கடந்த 25 ஆண்டுகளில் பதப்படுத்தப்பட்ட உணவுகளின் புலக்கமானது இந்தியா உட்பட உலக அளவில் பெரிய அளவில் வளர்ச்சி பெற்றிருக்கிறது. ஆனால் உணவுகளை பதப்படுத்த அதில் நைட்ரஜன் மட்டும் இல்லாமல் பல்வேறு வகையான வேதிப்பொருட்கள் கலக்கப்படுகிறது. இதில் கலோரிகள் அதிக அளவில் இருப்பதால் உடல் எடை சட்டு என்று அதிகரிக்கிறது. செரிமான சக்தி குறைந்து நுரையீரல் வீக்கம் அடைந்து அது பலவகை பாதிப்புகளை மனிதனுக்கு ஏற்படுத்துகிறது.
Maida
மைதாவில் தயாரிக்கப்பட்ட உணவுகள் மீது நமக்கு எப்போதும் ஒரு பயம் இருக்கும். ஆனால் வெள்ளை அரிசியில் இருக்கும் அதே விஷயம் தான் மைதாவிலும் இருக்கிறது என்று பல மருத்துவர்கள் கூறி வருகின்றார்கள். இருப்பினும் வெள்ளை அரிசியை உண்டால் நமக்கு பாதிப்புகள் ஏற்படும் அளவை காட்டிலும், இரண்டு மடங்கு அதிகமான பாதிப்பு மைதா பொருட்களை உட்கொள்ளும் பொழுது நமக்கு ஏற்படுத்துகிறது. உடல் பருமன் தொடங்கி இதய நோய், ரத்த அழுத்தம் போன்ற பல பிரச்சனைகளுக்கு இது காரணமாக மாறுகிறது.
1 கிளாஸ் பாலில் 'இந்த' ஒரு பொடியை கலந்து குடிங்க.. உங்க வாயிறு கிளீன் ஆகும்..