அம்பானி மருமகளின் பிரம்மாண்ட பிறந்தநாள் கொண்டாட்டம்! செலவு மட்டும் இவ்வளவா?

First Published | Oct 19, 2024, 1:21 PM IST

முகேஷ் அம்பானி குடும்பத்தின் இளைய மருமகள் ராதிகா மெர்ச்சன்ட் தனது முதல் பிறந்தநாளை ஆண்டிலியாவில் கொண்டாடினார். இதுதொடர்பான போட்டோக்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Radhika Merchant Birthday Celebration

முகேஷ் அம்பானி குடும்பத்தின் இளைய மருமகளான பிறகு ராதிகா மெர்ச்சன்ட் தனது முதல் பிறந்தநாளை கொண்டாடினார். அம்பானி குடும்பத்தின் ஆடம்பர வீடான ஆண்டிலியாவில் இதற்காக ஒரு பிரமாண்ட விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, அதில் ராதிகாவின் பெற்றோர் மற்றும் அம்பானி குடும்பத்தினர் கலந்து கொண்டனர். ராதிகாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராதிகா முதலில் கணவர் அனந்த் அம்பானிக்கு கேக் ஊட்டுவதையும். பின்னர் மாமனார் முகேஷ் அம்பானி மற்றும் தனது பெற்றோருக்கும் கேக் ஊட்டுவதையும் பார்க்க முடிகிறது..

Radhika Merchant Birthday Celebration

இருப்பினும், ராதிகா மெர்ச்சண்ட் அக்காஷ் அம்பானியிடம் சென்றபோது, அவர் முகத்தைத் திருப்பிக் கொண்டார். ஆகாஷ் அம்பானிக்கு ராதிகா கேக் ஊட்ட சென்ற போது, முகத்தை திருப்பி கொண்ட அவர்,  பாட்டி கோகிலாபென்னைக் காட்டி, முதலில் அவருக்கு ஊட்டுங்கள் என்று கூறினார். அதன்பிறகு ராதிகாவும் புரிந்துகொண்டு, உடனே பாட்டிக்கு கேக் ஊட்டி, ஆசிர்வாதம் பெற்றார். அதன் பின்னர் ராதிகா மாமியார் நீதா அம்பானியிடம் சென்று, அவருக்கும் கேக் ஊட்டினார்.

தனது பிறந்தநாளில் ராதிகா மெர்ச்சன்ட் சிவப்பு ஸ்கர்ட்டுடன் வெள்ளை நிற டாப்ஸ் அணிந்திருந்தார். சமூக ஊடகங்களில் ராதிகா மெர்ச்சன்ட்டின் பிறந்தநாள் கொண்டாட்டப் படங்களும் வீடியோக்களும் வைரலாகி வருகின்றன. 

Tap to resize

Radhika Merchant Birthday Celebration

இதனிடையே பிரம்மாண்டமான மற்றும் ஆடம்பரமான கொண்டாட்டங்களில் பல பிரபலங்கள் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். அனன்யா பாண்டே, ஜான்வி கபூர், சுஹானா கான் மற்றும் குஷி கபூர் ஆகியோர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றனர்.

அதே போல் கிரிக்கெட் ஜாம்பவான் மகேந்திர சிங் தோனி, ஓரி, ஆர்யன் கான், அர்ஜுன் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கபூர் மற்றும் ரன்வீர் சிங்கும் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டனர்.

Radhika Merchant Birthday Celebration

ஆனந்த் அம்பானி தனது மனைவிக்காக ஆடம்பரமான பிறந்தநாள் விழாவை நடத்தியதாகவும், இந்த விழாவுக்கு பல லட்சங்களில் செலவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

Radhika Merchant Birthday Celebration

தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகளான ராதிகா மெர்ச்சன, தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியை கடந்த ஜூலை 12-ம் தேதி திருமணம் செய்து கொண்டார். மிகவும் பிரம்மாண்டமாக நடந்த இந்த திருமணம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் கவனம் ஈர்த்தது. ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணச் செலவு ரூ 5,000 கோடி என்று கூறப்படுகிறது.. இந்த மிகப்பெரிய எண்ணிக்கை முகேஷ் அம்பானியின் மதிப்பில் 0.5 சதவீதம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!