Remove Fish Smell From House : வீட்டில் மீன் சமைக்கும் போது வீடு முழுவதும் மீன்வாடை அடிக்கும். வீட்டிலிருந்து வீசும் மீன்வடையை விரட்டுவது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
சமையலறை வீட்டில் இருக்கும் மிக மிக முக்கியமான ஒன்று ஆகும். நாம் தினமும் சமைக்கும் உணவுகளின் வாசனையானது சமையலறை மட்டுமின்றி வீடு முழுவதும் சுற்றி சுற்றி வரும். அதுவும் குறிப்பாக அசைவ உணவுகளை சமைக்கும்போது அதன் வாசனையானது மறுநாள் வரை சமையல் அறையில் இருக்கும். அதிலும் குறிப்பாக மீன் பற்றி சொல்லவே வேண்டாம். ஏனெனில் மீன் அலசுவது முதல் அதை சமைத்து முடிக்கும் வரை மீன் வாடையானது சமையலறை மட்டுமின்றி வீடு முழுவதும் பரவும்.
25
Remove Fish Smell From House in Tamil
பொதுவாகவே கடல் பகுதிகளிலிருந்து மீன் வாங்கி பிரஷ்ஷாக சமைக்கும் போது கிச்சனில் மீன் வாடையே அடிக்காது. அதுவே தூரமான பகுதிகளில் இருந்து வரும் மீன்களை ஐஸ் வைத்து படப்படுத்தி வைத்தால் அவற்றை சமைக்கும் போது கிச்சனில் கண்டிப்பாக மீன் வாடை அடிக்கும். இத்தகைய சூழ்நிலையில் நீங்கள் சமைத்த பிறகும் உங்கள் கிச்சனன் மற்றும் வீடு முழுவதும் மீன் வாடை அடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
35
Remove Fish Smell From House in Tamil
சமைத்த பிறகு கிச்சனில் மீன் வாடை அடிக்காமல் இருக்க டிப்ஸ்:
பேக்கிங் சோடா :
பேக்கிங் சோடாவைக் கொண்டு கிச்சனில் அடிக்கும் எல்லாவிதமான வாடையையும் எளிதாக விட்டியடிக்கலாம். அதிலும் குறிப்பாக கிச்சன் சிங்க், பாத்திரங்கள் ஃப்ரிட்ஜ் போன்றவற்றில் மீன்வடை அடித்தால் கூட அவற்றை பேக்கிங் சோடாவைக் கொண்டு நீக்க முடியும். சரி இப்போது மீன் வாடையைப் போக்க பேக்கிங் சோடாவை பயன்படுத்தும் முறை பற்றி பார்க்கலாம்.
இதற்கு முதலில் இரண்டு முதல் நான்கு லிட்டர் தண்ணீரை நன்றாக சூடு படுத்திக் கொள்ளுங்கள். இப்போது அதில் இரண்டு முதல் மூன்று ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கவும். பிறகு இந்த தண்ணீரில் மீன் சமைத்த பாத்திரங்களை சுமார் 15 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு வழக்கம் போல சோப்புகளை பயன்படுத்தி பாத்திரங்களை கழுவி காயவைத்து எடுத்தால் பாத்திரத்தில் இருந்து மீன் வாடை அடிக்கவே அடிக்காது. மேலும் பாத்திரத்தின் மூலம் வீடு முழுவதும் பரவும் மீன் வாடையையும் நீங்கும்.
55
Remove Fish Smell From House in Tamil
ஃப்ரிட்ஜில் அடிக்கும் மீன் வாடையை விரட்ட டிப்ஸ்:
ஃப்ரிட்ஜில் இருந்து வீசும் மீன்வாடையை விரட்ட முதலில் பிரிட்ஜில் இருந்து அனைத்து பொருட்களையும் வெளியே எடுத்துவிடுங்கள். இப்போது ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பேக்கிங் சோடா மற்றும் வினிகர் சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த நீரை ஒரு ஸ்ப்ரே பாட்டில் நிரப்பி அவற்றை கொண்டு ஃப்ரிட்ஜில் நன்கு தெளிக்கவும். சுமார் 10 நிமிடம் அப்படியே வைத்து விடுங்கள். பிறகு ஃப்ரிட்ஜை எப்போதும் போல சுத்தம் செய்ய வேண்டும். இப்படி செய்தால் ஃப்ரிட்ஜில் மீன் வாடை அடிக்காது.