
ஒவ்வொரு காய்கறிகளும் ஒவ்வொரு விதமான சுவைகளை கொண்டிருப்பது போல, சத்துக்களையும் கொண்டிருக்கும். அவற்றில் ஒன்றுதான் வெண்டைக்காய். இது எல்லா பருவங்களிலும் கிடைக்க கூடிய காய்கறிகளில் ஒன்றாகும். வெண்டைக்காயை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் இது வழுவழுப்பாக இருப்பதால் ஒரு சிலர் வெண்டைக்காயை விரும்பி சாப்பிட மாட்டார்கள். வெண்டைக்காயில் கூட்டு பொறியியல் சாம்பார் என பல வகையான ரெசிபிகள் செய்து சாப்பிடலாம்.
வெண்டைக்காயில் புரதம், கார்போஹைட்ரேட், கால்சியம் பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, பி, சி போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. வெண்டைக்காய் மூளையை கூர்மையாக்கும், ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் போன்ற பல ஆரோக்கிய நன்மைகளுக்கு உதவுகிறது.
அந்த வகையில் வெண்டைக்காயை தண்ணீரில் ஊற வைத்து அந்த நீரை குடித்து வந்தால் அதன் சத்துக்களை முழுமையாக பெறலாம் என்று நிபுணர்கள் பலர் சொல்லுகின்றனர். எனவே வெண்டைக்காய் நீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் அதை எப்படி தயாரிப்பது என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.
இதையும் படிங்க: Ladies Finger : வெண்டைக்காயை யார் சாப்பிடக்கூடாது தெரியுமா..? மீறினால் என்ன..?
வெண்டைக்காய் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:
1. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
வெண்டைக்காயில் வைட்டமின் சி அதிகமாக உள்ளதால் இது நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த பெரிதும் உதவுகிறது. அதுவும் குறிப்பாக மாறிவரும் பருவ காலத்தில் சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சனை வந்தால் வெண்டைக்காய் நீரை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை குடிக்கலாம்.
2. ரத்த சோகையை போக்கும்
இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிட்டு வந்தால் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து ரத்த சோகையை போக்கும். வெண்டைக்காயில் இரும்பு சத்து அதிகமாகவே உள்ளதால் வெண்டைக்காய் ஊற வைத்த நீரை குடித்து வந்தால் உடலில் ரத்த ஓட்டம் சீராகும்.
3. மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும்
வெண்டைக்காய் ஊற வைத்த நீரில் நார்ச்சத்து அதிகமாகவே இருப்பதால் இது வயிற்றை சுத்தம் செய்து செரிமான பிரச்சனைகளை சமாளிக்கும். எனவே மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த நீர் ரொம்பவே நல்லது.
4. கண் பார்வையை அதிகரிக்க செய்யும்
வெண்டைக்காயில் வைட்டமின் கே, பீட்டா கரோட்டின் அதிகமாகவே உள்ளதால் இவை கண் பார்வையை மேம்படுத்த உதவுகிறது. எனவே வெண்டைக்காயை தண்ணீரில் ஊற வைத்து அந்த நீரை குடித்து வந்தால் கண் பார்வை அதிகரிக்கும்.
5. எடையை குறைக்க உதவும்
வெண்டைக்காயை தண்ணீரில் ஊற வைத்து அந்த நீரை குடித்து வந்தால் அதில் இருக்கும் சத்துக்கள் உடல் எடையை குறைக்கவும் உடலை கட்டுக்கோப்பாக வைக்கவும் பெரிதும் உதவுகிறது.
6. இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும்
வெண்டைக்காய் நீர் சர்க்கரை நோயாளிகளுக்கு ரொம்பவே நல்லது. ஏனெனில், அந்த நீரானது நாம் சாப்பிட்ட உணவுகளில் இருந்து கார்போஹைட்ரேட்டை உறிஞ்சி செரிமானத்தை மெதுவாக்கும். இதனால் ரத்த சர்க்கரை அதிகமாகாமல் தடுக்கப்படும்.
7. இதய ஆரோக்கியத்திற்கு நல்லது
வெண்டைக்காய் ஊற வைத்த நீரை குடித்து வந்தால் உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பது தடுக்கப்படும். இதனால் இதயம் போன்ற பல நோய்களின் அபாயம் குறையும். முக்கியமாக இதயம் சிறப்பாகவும் செயல்பட உதவுகிறது.
வெண்டைக்காய் நீர் தயாரிக்கும் முறை:
இதற்கு 4 அல்லது 5 வெண்டைக்காயை எடுத்து அதன் முனைகளை நறுக்கி, பின் அதை கீறி பிறகு அதை ஒரு பாத்திரத்தில் போட்டு 2 கிளாஸ் தண்ணீரை அதில் ஊற்றி இரவு முழுவதும் ஊற வைக்கவும். பிறகு மறுநாள் காலை அந்த நீரை மட்டும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
எப்போது குடிக்க வேண்டும்?
தினமும் காலை வெறும் வயிற்றில் வெண்டைக்காய் நீரை குடிப்பது தான் நல்லது. இப்படி குடிப்பதன் மூலம் வெண்டைக்காயில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் முழுமையாக உடலுக்கு கிடைக்கும்.
இதையும் படிங்க: Ladies finger: வெண்டைக்காயை தினமும் இப்படி சாப்பிட்டால்... சுகர் பிரச்சனையை ஓட ஓட விரட்டுமாம்..!!
யாரெல்லாம் குடிக்க கூடாது?
வெண்டைக்காய் சாப்பிட்டால் அலர்ஜி உள்ளவர்கள் வெண்டைக்காய் நீரை ஒருபோதும் குடிக்க கூடாது. அதுபோல குடல் நோய் அறிகுறி உள்ளவர்களும் வெண்டைக்காய் நீர் குடிப்பதை தவிர்ப்பது நல்லது. இது தவிர கற்பனைகள் மற்றும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பவர்கள் இந்த நீரை குடிக்க வேண்டாம்.