Independence Day 2022: வீட்டில் தேசிய கொடி ஏற்றும் போது...கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்...

Published : Aug 08, 2022, 07:19 PM IST

Independence Day 2022: இந்த ஆண்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை வரவேற்கும் விதமாக ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரை வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற தன் நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

PREV
17
Independence Day 2022: வீட்டில் தேசிய கொடி ஏற்றும் போது...கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்...
independence day

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை வரவேற்கும் விதமாக ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரை வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற தன் நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

மேலும் படிக்க ...Shukra Peyarchi: ஒரே மாதத்தில் நிகழும் 5 சுக்கிர பெயர்ச்சிகள்..இந்த ராசிகளுக்கு வரப்பிரசாதம்..உங்கள் ராசி என்ன

27

பிரதமர் மோடி அறிவுறுத்தலின் பேரில், நீங்கள் உங்கள் வீட்டில் தேசியக்கொடி ஏற்ற போகிறீர்கள் என்றால் உங்களுக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும். ஆம், நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டிய, 2002 மற்றும் 1971ல் கொண்டு வரப்பட்ட  தேசிய சின்னங்கள் அவமதித்தல் தடுப்பு சட்டத்தின் வழிகாட்டுதல் நெறிமுறைகள் உள்ளது. 

37

தேசியக் கொடியின் துணி:

1. காதி துணி அல்லது விசை தறி துணியால் செய்யப்பட்ட தேசியக் கொடிக்கு மட்டுமே அனுமதி இருந்தது. தற்போது, தேசியக்கொடியைக்  பாலிஸ்டர் துணி, பருத்தி, கம்பளி, விசைத்தறி போன்றவற்றிலும் செய்யலாம். தேசியக் கொடியின் வெளிப்படுத்துதல், கையாள்தல் முறைகள், இந்திய கொடிச் சட்டத்தால் ஆளப்படுகிறது.

மேலும் படிக்க ...Shukra Peyarchi: ஒரே மாதத்தில் நிகழும் 5 சுக்கிர பெயர்ச்சிகள்..இந்த ராசிகளுக்கு வரப்பிரசாதம்..உங்கள் ராசி என்ன

47

2. தேசியக் கொடியின் அகலம்:
 
இந்த கொடி எந்த அளவிலானதாகவும் இருக்கலாம். ஆனால், தேசியக் கொடியானது அகலம் (3) : உயரம் (2) அதாவது 3:2 என்ற அளவில் அமைக்கப்பட வேண்டும். 

3. தேசியக்கொடியை அரை கம்பத்தில் பறக்க விடலாமா..?

தேசியக்கொடியை அரை கம்பத்தில் பறக்க விட கூடாது. பழுதடைந்த அல்லது கசங்கிய கொடியை பறக்க விடக்கூடாது. 3 நிறங்களும் சரிசமான உயரத்தில் இருக்க வேண்டும்.
 

57
independence day

4. வீட்டில் பறக்க விடும் போது தேசியக் கொடிக்கு அருகில் அதைவிட உயரமாகவோ அல்லது இணையாகவோ எந்த ஒரு கொடியோ அல்லது கொடி போன்ற பொருளோ இடம்பெறக் கூடாது. 
 

67
independence day

5. கார்களில் கொடி பறக்க விடலாமா..?

குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், நீதிபதிகள், மக்களவை, மாநிலங்களவை துணை சபாநாயகர் போன்றவர்களுக்கு மட்டுமே கார்களில் கொடி பறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கார்களில் கொடிகளைப் பறக்க விடும் போது நிலையாகப் பொருத்தப்பட்ட கம்பியில்தான் பறக்கவிட வேண்டும்.

77
independence day

6. தேசியக் கொடியை ஏந்தி ஊர்வலம் செல்லும் போது, வலப்பக்கமாக ஏந்திச் செல்லவேண்டும். மேலும் நிறைய மற்ற கொடிகள் இருந்தால், அனைத்து கொடிக்கும் முன்பு நமது தேசியக் கொடி இருக்கவேண்டும்.

7. தேசியக் கொடியை கீழே இறக்கும் போது சற்று மெதுவாகவும், அலங்காரமாகவும் இறக்க வேண்டும்.  தேசியக் கொடி தரையில் விழவோ அல்லது தண்ணீரில் மிதக்கவோ விடக்கூடாது. 

மேலும் படிக்க ...Shukra Peyarchi: ஒரே மாதத்தில் நிகழும் 5 சுக்கிர பெயர்ச்சிகள்..இந்த ராசிகளுக்கு வரப்பிரசாதம்..உங்கள் ராசி என்ன

Read more Photos on
click me!

Recommended Stories